தொடர் மழையால் பசுமைக்கு திரும்பிய முதுமலை

முதுமலையில் சாலையோரம் புற்களை மேய்ந்த மான் கூட்டம். படம்: ஆர்.டி.சிவசங்கர்.
முதுமலையில் சாலையோரம் புற்களை மேய்ந்த மான் கூட்டம். படம்: ஆர்.டி.சிவசங்கர்.
Updated on
1 min read

உதகை

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இரவு மற்றும் பகல் நேரங்களில் பரவலாக மழை பெய்கிறது. இதனால் மாவட்டத்தின் முக்கிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அவலாஞ்சி அணை முழு கொள்ளளவை எட்டியதால், கடந்த 15 நாட்களில் மூன்றாம் முறையாக திறக்கப்பட்டது.

இரண்டு மதகுகளில் விநாடிக்கு, 450 கன அடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டது. இதனால், குந்தா, பில்லூரில் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என வருவாய் துறையினர் அறிவித்தனர்.

இந்நிலையில், நேற்று உதகையில் பகலில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது.

கோடையில் முதுமலை புலிகள் காப்பகம் வறண்டு, செடிகொடிகள் காய்ந்த நிலையில், தற்போது மழை பெய்து வனத்தில் பசுமை திரும்பி புல் மற்றும் தாவரங்கள் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால், வன விலங்குகளின் உணவு தேவையும் பூர்த்தியாகி வருகிறது.

யானைகள், காட்டெருமைகள், மான்கள், மயில்கள் என விலங்கு களின் நடமாட்டம் அதிகரித்துள்ள தால், புலிகள் காப்பகத்தினுள் சவாரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இவற்றை கண்டு ரசித்து வருகின்ற னர். சாலையோரங்களில் விலங்குகள் வலம் வருவதால், அவற்றை தொந்தரவு செய்யாமல் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்றும், வன விலங்குகளை கண்டால் செல்ஃபி எடுக்க கூடாது. செல்ஃபி எடுப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in