

தஞ்சாவூர்
கீழடியில் முழுமையாக அகழாய்வு செய்ய வேண்டும் என்று தொல்லி யல் ஆய்வாளர் அமர்நாத் ராம கிருஷ்ணா தெரிவித்தார்.
தஞ்சாவூரில் சிந்தனை மேடை அமைப்பு சார்பில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற, ‘கீழடி - தமிழர் வாழ்வும் வரலாறும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் அவர் பேசியதாவது:
கீழடியில் செய்யப்படும் ஆய்வு கள் அரைகுறையானவை. இதை முழுமையாகச் செய்தால்தான் தமிழர் வரலாற்றுக் கால அளவை முழுமையாக அறிய முடியும். தமிழர்களின் வரலாறு கி.மு.300 எனக் கூறப்படுகிறது. இதற்கும் முந்தையது என்பதைக் கண்டறிய கீழடியில் முழுமையாக அகழாய்வு செய்ய வேண்டும்.
கீழடியில்தான் அதிக அளவில் செங்கல் கட்டிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, இதை நகர நாகரிகம் இல்லை எனக் கூற முடியாது. இந்தக் கூற்றை மாற்றியது இரண்டாம் கட்ட அகழாய்வுதான்.
நகர மக்கள்தான் அதிநவீன வாழ்க்கையை விரும்புவர். கீழடி யில் எங்களுடைய ஆய்வில் ஏறக் குறைய 15 உறை கிணறுகள் கண்டறி யப்பட்டன. அங்குள்ள உறை கிணறு கள், வடிகால் முறை போன்றவற் றைக் காணும்போது, அது நகர வாழ்க்கைக்கான அடையாளங்கள் தான் என்பது உறுதியாகிறது.
அங்கு 1,800 தொல்பொருட்கள் கிடைத்தும், பொருட்கள் உற்பத்தி எதுவும் செய்யப்படவில்லை என் பது தெரியவருகிறது. பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தால், அதற்கான மூலப்பொருட்களின் தடயம் இருந்திருக்கும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அப் படியொரு தடயம் கிடைக்க வில்லை.
நகர நாகரிகம்தான்
மேலும், அரைகுறைப் பொருட்க ளாக அல்லாமல், முழுமையான பொருட்களாகவே கிடைத்துள்ள தால், அவற்றை வெளியில் இருந்து தான் வாங்கியிருப்பார்கள் என்பதை அறிய முடிகிறது. நகர நாகரிகத்தில் தான் பொருட்களை வெளியில் வாங்கும் பழக்கம் இருக்கும். மேலும் யானைத் தந்தத்தால் செய் யப்பட்ட சீப்பு, தாயக்கட்டை, அணி கலன்கள் போன்றவை கிடைத்துள் ளது, கீழடியின் நாகரிகம் நகர நாகரி கம் என்பதுடன் அங்கு, முழுமை யான நாகரிக வாழ்க்கை பின்பற்றப் பட்டது என்பதை உறுதிப்படுத்து வதாக உள்ளது.
ஆய்வில் திருப்தி இல்லை
தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வு திருப்திகர மாக இல்லை. வெறும் 3 அல்லது 4 மாதங்களுக்கு மட்டும் செய்யப்ப டும் அகழாய்வு மூலம் தகவல்கள் முழுமையாகக் கிடைக்காது. இன் னும் ஆழமாக அகழாய்வு செய் தால், தமிழர்களின் நாகரிக வரலாற் றுக் காலம் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வாய்ப்புள் ளது. அதற்கு, தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்காவது அகழாய்வு செய்ய வேண்டும். இதன் மூலம் தமி ழர் வரலாற்றை மறுகட்டமைப்புச் செய்ய முடியும் என்றார்.