காந்தி ஜெயந்தியன்று விடுமுறை சட்டத்தை பின்பற்றாத 1,596 நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை: தொழிலாளர் நலத் துறை தகவல்

காந்தி ஜெயந்தியன்று விடுமுறை சட்டத்தை பின்பற்றாத 1,596 நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை: தொழிலாளர் நலத் துறை தகவல்
Updated on
2 min read

சென்னை

காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை தினத்தன்று விடுமுறை சட்டத்தை பின்பற்றாத 1,596 நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வமான நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு வதாக தொழிலாளர் நலத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய விடுமுறை தினங்களான குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 4 நாட்கள் மற்றும் 5 பண்டிகை விடுமுறை தினங்கள் என 9 நாட்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது.

அதன்படி கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணி யாற்றும் தொழிலாளர்களை விடுமுறை தினத்தன்று பணிக்கு அமர்த்தினால், அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அனுமதித்து உரிய படிவத்தில் சம்பந்தப்பட்ட தொழி லாளிக்கு அறிவிப்பு அளிக்க வேண் டும். அதன் நகலை சம்பந்தப் பட்ட ஆய்வர்களுக்கு அனுப்ப வேண்டும். நிறுவனத்திலும் அறி விப்பு பலகையில் வெளியிட வேண்டும்.

தொழிலாளர் ஆணையர் ஆர்.நந்தகோபால் அறிவுரையின் பேரில், காந்தி ஜெயந்தியன்று தமிழ்நாடு தேசிய பண்டிகை மற்றும் விடுமுறை சட்டம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

அதன் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களி லும் கடைகள், உணவு நிறுவனங் கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங் கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவ னங்களில் சிறப்பாய்வு மேற்கொள் ளப்பட்டது.

இந்த ஆய்வில் சென்னை மண்டலத்தில் 294 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 235 உணவு நிறுவனங்கள், 37 மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட 566 நிறுவனங்களில் தவறுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டன. கோவை மண்டலத்தில் 180 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 190 உணவு நிறுவனங்கள், 34 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், 2 தோட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட 406 நிறுவனங்களில் தவறுகள் கண்டறியப்பட்டன.

அதேபோல், திருச்சி மண்ட லத்தில் 143 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 109 உணவு நிறுவ னங்கள், 21 மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள், 6 தோட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட 279 நிறுவனங்களிலும், மதுரை மண் டலத்தில் 196 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 119 உணவு நிறுவ னங்கள், 30 மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட 345 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

தமிழ்நாடு தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை சட்டம் மற்றும் விதிகளை மீறியதற்காக தமிழகத்தில் உள்ள 813 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 653 உணவு நிறுவனங்கள், 122 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், 8 தோட்ட நிறுவனங்கள் என 1,596 நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in