

சென்னை
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர் தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
தேர்தலுக்கான முன்னேற்பாடு களை மாநில தேர்தல் ஆணையம் தற்போது செய்து வருகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட் டுள்ளனர். இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வழங்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் உள்ளாட்சித் தேர்தலுக் கான வாக்காளர் பட்டியலை தயா ரிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இந்நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் கடந்த 30-ம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில், ‘சட்டப்பேரவை தொகுதிகளுக் கான வாக்காளர் பட்டியல் அடிப் படையில் உள்ளாட்சித் தேர்தலுக் கான வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும். செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பணிகளை நிறைவு செய்து அன்றே புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அக்டோபர் 1-ம் தேதி பட்டி யலை அச்சுப்பணிக்கு அனுப்பி, 3-ம் தேதி பணிகளை நிறைவு செய்து பட்டியலை பெற வேண்டும். வாக்காளர் பட்டியலை அக்டோபர் 4-ம் தேதி வெளியிட வேண்டும். மறுநாள் 5-ம் தேதி அப்பட்டியலை அரசியல் கட்சி களுக்கு வழங்க வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, உள்ளாட்சித் தேர் தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இன்று வெளியிடுகின்றனர்.
இதற்கிடையில், இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அதன் அடிப்படையில், வாக்காளர் பட்டியலில் பின்னர் பெயர் சேர்க் கப்பட்டால், துணைப் பட்டியல் வெளியிடப்படும் என தெரிகிறது.