

ஆவடி காமராஜ் நகர் தபால் நிலையத்தில் கணினி பழுதடைந் துள்ளதால் கடந்த 10 நாட்களாக மணியார்டர் அனுப்ப முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுவதாக உங்கள் குரலில் வாசகர் புகார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆவடி, காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த வாசகர் ஆர்.துரைசிங்கம் ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு கூறியதாவது: ஆவடி காமராஜ் நகர் பகுதியில் உள்ள அஞ்சல் நிலையத்தை இரண்டு லட்சத்துக் கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 10 நாட் களாக இங்குள்ள கணினி பழு தடைந்திருப்பதால் மணியார்டர் அனுப்ப முடியவில்லை.
இங்கு மணியார்டர் அனுப்ப வரும் பொதுமக்கள், அங்கிருந்து இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத் துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் படுகின்றனர். இதனால், பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே, பொதுமக்களின் நலன் கருதி இப்பிரச்சினைக்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, காமராஜ் நகர் அஞ்சல் நிலையத்தில் விசாரித்த போது, ‘கணினி சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மணியார்டர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது அந்த பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது” என்றனர்.