

சென்னை
உதகையில் தகுந்த மருத்துவ வசதி கள் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்பு களைத் தடுக்க விமான ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்படுமா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் இன்று பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதகையில் மெட்ராஸ் ரேஸ் கிளப் புக்கு சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்தை வாகன நிறுத்தம் அமைக்க திருப்பி வழங்கக் கோரி நீலகிரி மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பி யிருந்தார். இந்த நோட்டீஸை எதிர்த்து மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார்.
இதை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந் தது.
அப்போது நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் ஏற்கெனவே உதகையின் சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதாரங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் குன்னூரில் தலைமை கழிவு நீர் நிலையம் அமைப்பது குறித்தும், ஊட்டி நகர் மற்றும் ஊட்டி ஏரியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்க தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின்போது ஊட்டியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அவசர காலகட்டங்களில் தேவையான மருத் துவ வசதிகள் கிடைப்பதில்லை என்றும், இதற்காக 3 மணி நேரம் செலவழித்து கோவைக்கு வந்து மருத்துவ வசதிகளைப் பெற வேண்டி யுள்ளது என்றும், இதனால் பல உயிரி ழப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
எனவே உதகையில் வசிக்கும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு உதகையில் மருத்துவ கல்லூரியுடன் கூடிய பன்னோக்கு அரசு மருத்துவ மனை அமைக்க தமிழக அரசிடம் ஏதாவது திட்டம் இருந்தால், அந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
அதுவரை அங்கு வசிக்கும் பொது மக்களின் அவசர மருத்துவ சிகிச்சை களை கருத்தில் கொண்டு விமான ஆம்பு லன்ஸ் சேவை பயன்படுத்தப்படுமா அல்லது வேறு ஏதேனும் அதிநவீன மருத்துவ வசதிகள் அங்கு ஏற்படுத் தப்படுமா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் இன்று பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.