Published : 04 Oct 2019 07:52 AM
Last Updated : 04 Oct 2019 07:52 AM

ஜல்லிக்கட்டைபோல் ‘கிடா முட்டு’ சண்டைக்கும் தடை நீக்கப்படுமா?- நாட்டு செம்மறி ஆட்டு இனம் அழியும் அபாயம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக தென் தமிழக கிராமங்களில் நடத் தப்படும் ‘கிடா முட்டு' சண்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நாட்டு செம்மறி ஆட்டு இனங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 2 ஆயிரம் ‘கிடா முட்டு' சண்டை நாட்டு கிடாக்கள் வளர்க்கப்படுகின்றன. மதுரையில் ‘கிடா முட்டு' சண்டை நடக்காவிட்டாலும் திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்ட கிராமங் களில் நடக்கும் சண்டைகளுக்கு இந்தக் கிடாக்களை அதன் உரிமை யாளர்கள் அழைத்துச் சென்று இந்த விளையாட்டை அழியாமல் உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.

‘கிடா முட்டு' சண்டை விளை யாட்டையும், அதற்காகத் தயார் படுத்தும் கிடா இனங்களைப் பற்றி யும் ஆவணப்படுத்தும் மதுரை மேலூரைச் சேர்ந்த மணிக்குமார் கூறியதாவது:

‘கிடா முட்டுக்கும்' நெடிய வரலாறு உண்டு. கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. முன்னோர், கிடாக்களை சண்டைக்குவிட்டதில் ஓர் அறிவியல் உள்ளது. நாட்டு செம்மறி ஆடுகளை வளர்க்கும் விவசாயக் குடிகள், அதில் வீரிய மிக்க நாட்டு கிடாக்களைத் தேர்ந் தெடுத்து மோத விடுவார்கள். வெற்றிபெறும் காளைகளை இனப் பெருக்கத்துக்குப் பயன்படுத்து கிறார்கள். நாட்டு கிடாக்களில் கமுதி, கம்பம், எட்டயபுரத்தைச் சேர்ந்த பொட்டுக் கிடா, கச்சைகட்டி கருப்புக் கிடா, ராமநாதபுரம் கண் கருப்புக் கிடா முக்கியமானவை.

போர்களில் மன்னர்கள், கிடா படையையும் பயன்படுத்தினர். நாட்டு மாடு, சேவல், ஆடுகளாக இருக்கட்டும் வீரியமிக்க நாட்டு இனங்களுக்கும், வீரக் கலைகளுக் கும் விதைக்களம் மதுரைதான். ஒரு மரம் எங்கு முளைக்கிறதோ அங்கு அந்த வேரைப் பிடுங்கினால் அந்த மரம் அழிந்துவிடும். அந்த அடிப்படையில்தான் திட்டமிட்டே மதுரையில் கிடாச் சண்டை தடை செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் கிடா சண்டை நிறுத் தப்பட்டதால் வீரியமிக்க கிடாக் களைக் கண்டறிய முடியாமல் நாட்டு செம்மறி ஆட்டு இனங்களில் நோய் வாய்ப்பட்ட இனங்கள் உரு வாகும் அபாயம் உள்ளது. தற் போது கச்சை கட்டி என்ற நாட்டு செம்மறி ஆடுகள் 5 ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. கீழக் கரிசல், செங்கிடா மிக அரிதாகவே உள்ளன. பொட்டு இனம் அழிவை நோக்கிச் செல் கிறது. அழிவைத் தடுக்க கிடா சண் டைகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

வருமானம் எதுவும் கிடையாது

ஜல்லிக்கட்டு காளைகளைப்போல், இந்தச் சண்டை கிடாக்களுக்கும் துவரம் பொட்டு, உளுந்து குருணை, இரும்புச் சோளம், நிலக்கடலை, கொண்டக் கடலை, பச்சரிசி, பாசிப்பயறு, கொள்ளு, கம்பு, பேரீச்சம்பழம், மக்காச்சோளம், கோதுமைத் தவிடு, அகத்திக் கீரை, கடலைப் புண்ணாக்கு போன்ற பிரத்யேகமான உணவுகள் கொடுத்து வளர்க்கப்படுகின்றன.

வாரம்ஒருமுறை ஒன்றரை மணி நேர நீச்சல் பயிற்சி, நடைபயிற்சி வழங்கப்படுகின்றன. நாட்டுக்கோழி முட்டை, பசும்பால் வழங்கப்படுகின்றன. இந்த வகையில் நாளொன்றுக்கு ஒரு சண்டை கிடாவுக்கு ரூ.150 முதல் ரூ.200 வரை செலவாகிறது. பிறந்த 14 மாதங்களில் இந்த கிடாக்களுக்கு 2 பல் போடும். அப்போது சண்டைக்குத் தயார்ப்படுத்தப்படுகிறது. ஒரு கிடாவை சண்டைக்கு அழைத்துச் செல்வதற்கு ரூ.4 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், வெற்றிபெற்றால் பரிசு ரூ.1,500-தான் கிடைக்கும். இந்தக் கிடாச் சண்டையில் வருமானம் எதுவும் கிடையாது. பணம் போனாலும் பரவாயில்லை என்று பாரம்பரியத்தைக் காப்பாற்ற வளர்க்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x