Published : 04 Oct 2019 07:28 AM
Last Updated : 04 Oct 2019 07:28 AM

ராதாபுரம் தொகுதிக்கு மறுவாக்கு எண்ணிக்கை; உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் முன்னிலையில் இன்று நடக்கிறது: தடை விதிக்க கோரி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சென்னை / திருநெல்வேலி

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண் ணிக்கைக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தாக் கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை யடுத்து, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி 3 சுற்றுகள் மற்றும் தபால் வாக்குகளின் மறு எண் ணிக்கை உயர் நீதிமன்றத்தில் தலை மைப் பதிவாளர் முன்னிலையில் இன்று காலை நடக்கிறது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அவரை எதிர்த்து போட்டி யிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர் தல் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், ‘இன்பதுரை என்னைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 203 தபால் ஓட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதேபோல 19, 20, 21 சுற்றுகளுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு முறைகேடுகள் நடந்தன. எனவே, அந்த வாக்குகளை மறு எண் ணிக்கை நடத்த உத்தரவிட வேண் டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ‘சம்பந்தப்பட்ட சுற்றுகளின் வாக்குகள் மற்றும் செல்லாத வாக்குகளாக அறிவிக் கப்பட்ட 203 தபால் வாக்குகளை மட்டும் மறு எண்ணிக்கை நடத்தும் வகையில் அவற்றின் வாக்குப் பதிவு இயந்திரங்களை அக்.4-ம் தேதி (இன்று) உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப் படைக்க வேண்டும்’ என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் துள்ளதால், மறுவாக்கு எண் ணிக்கை உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் எம்எல்ஏ இன்பதுரை மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இன்பதுரை தரப்பில் மூத்த வழக் கறிஞர் டி.வி.ராமானுஜம் ஆஜராகி, ‘‘தபால் வாக்குகளை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் சான்றொப்பம் செய்துள்ளதால்தான் அவை செல்லாதவை என அறிவிக் கப்பட்டன. பொதுவாக தபால் வாக்குகளை அளிக்கும்போது அவற்றை அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரி சான்றொப்பம் செய்ய வேண்டும். ஆனால் இந்த நீதிமன் றம், சம்பந்தப்பட்ட அந்த பள்ளி தலைமையாசிரியரும் அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரியே (கெஜட் டெட்) என உத்தரவில் பதிவு செய்துள்ளது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம். எனவே, மறுவாக்கு எண்ணிக்கை உத்தர வுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.

அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.ஆர். ராஜ கோபால், ‘‘இந்த வழக்கில் சர்ச்சைக் குரிய சுற்றுகளின் எண்ணிக்கை மற்றும் செல்லாதவை என அறிவிக் கப்பட்ட தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு மட்டுமே பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது’’ என்றார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், ‘‘சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு இயந் திரங்களை நீதிமன்றத்தில் ஒப் படைக்க தயாராக உள்ளோம். ஆனால், வாக்குகளை எண்ணும் போது சில தொழில்நுட்ப பொறி யாளர்கள் உடனிருக்க அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதி, ‘‘இந்த வழக்கில் ஏற்கெனவே உத்தரவிட்ட படி 19, 20 மற்றும் 21 ஆகிய சுற்றுகளின் வாக்குகள், 203 தபால் வாக்குகளின் மறுஎண்ணிக்கை நாளை (இன்று) திட்டமிட்டபடி உயர் நீதிமன்றத்தில் நடத்தப்படும். அதற்கான வாக்குப்பதிவு இயந் திரங்களை உடனடியாக தேர்தல் ஆணையம் ஒப்படைக்க வேண்டும். எனவே, இந்த உத்தரவுக்கு தடை கோரி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டார்.

இதற்கிடையே, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தபால் வாக்குகள் மற்றும் 19-ம் சுற் றுக்கான 14 இயந்திரங்கள், 20-ம் சுற்றுக்கான 14 இயந்திரங்கள், 21-ம் சுற்றுக்கான 6 இயந்திரங்கள் என மொத்தம் 34 வாக்குப்பதிவு இயந் திரங்கள் ஆகியவை நேற்று மாலை போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இப் பணியை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேரடியாக கண்காணித்தார்.

ராதாபுரம் தொகுதி தேர்தல் நடத் தும் அலுவலர் பால்பாண்டி, வட் டாட்சியர்கள் செல்வம், ஆவுடை நாயகம் ஆகியோர் இன்று காலை 11.30 மணி அளவில் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் வாக்குப் பெட்டிகளை ஒப்படைக்கின்றனர். வாக்குகளை எண்ணுவதற்காக 3 வட்டாட்சியர்கள், துணை வட்டாட் சியர்கள், உதவியாளர்கள் என்று 24 அலுவலர்களும் திருநெல்வேலி யில் இருந்து நேற்று மாலை சென் னைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

இதனிடையே, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக் கோரும் மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என இன்பதுரை தரப் பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று காலை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பாக முறையீடு செய்யப் பட்டது. அதை நிராகரித்த நீதிபதி, ‘‘மனு பட்டியலிடும்போது விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப் படும்’’ என உத்தரவிட்டார். இந்த மனுவை விசாரிக்கும்போது தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண் டும் என அப்பாவு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x