

தமிழகத்தில் பல்வேறு நோய்களால் 5 வயதுக்கு கீழ் உள்ள 1000-க்கு 23 குழந்தைகள் உயிரிழப்பதாக கன்னியாகுமரி ஆட்சியர் கவலை தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத் துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் பேசும்போது, ‘தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் ஓராண்டில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 1000-க்கு 23 குழந்தைகள் உயிரிழக்கின்றன. இதில் 10.4 சதவீதம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறக் கின்றன.
தாய்ப்பால் சரிவர கொடுக் காதது, சுத்தமான உணவின்மை, மனித கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாதது, சுகாதாரமான கழிப்பறைகள் இல்லாதது, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.
குழந்தைகள் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டால் கொடுப்பதற்காக அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்களில் துத்தநாக மாத்திரை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும் .
தாய்ப்பாலின் அவசியம், கை கழுவும் முறைகள் குறித்து படக்காட்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 1 வரை 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் சென்று உரிய சிகிச்சை வழங்க வேண்டும்.
வயிற்றுப்போக்கால் குழந்தை கள் பாதிக்கப்பட்டிருந்தால் துத்தநாக மாத்திரை கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்து குறை வான குழந்தைகளை கண்டறிந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார் ஆட்சியர்.
மருத்துவ கல்லூரி முதல்வர் வடிவேல் முருகன், தொழுநோய் ஒழிப்பு திட்ட துணை இயக்குநர் கிரிஜா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) நசீர்பாபு, ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜகுமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள், பள்ளிக் கல்வித்துறை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.