

இனியும் காலம் தாழ்த்தாமல் என்எல்சி தொழிலாளர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நெய்வேலி என்எல்சி பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென்று நிர்வாகத்தை கடந்த நான்காண்டு காலமாக கோரி வருகின்றனர்.
நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அலட்சியப் படுத்தியதின் காரணமாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்திட வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளனர்.
கடந்த 20-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் நிலையில், நேற்றைய தினம் (22.07.2015) நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது கவலையளிக்கின்றது.
இனியும் காலம் தாழ்த்தாமல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு உடனடியாக தலையிட்டு சுமூக தீர்வுகாண வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.