Published : 03 Oct 2019 10:59 AM
Last Updated : 03 Oct 2019 10:59 AM

ஆக்கிரமிப்பை அகற்ற உதவியதால் கொலையான கிராம உதவியாளர் மகளுக்கு ஒரே நாளில் விஏஓ பணி- சிவகங்கை ஆட்சியருக்கு அரசு ஊழியர்கள் பாராட்டு

கிராம உதவியாளர் ராதாகிருஷ்ணனின் மகள் தாரணிக்கு கிராம நிர்வாக அலுவலர் பணி ஆணையை கோட்டாட்சியர் சங்கரநாராயணன் வழங்கினார். அருகில், வட்டாட்சியர் மேசையதாஸ்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே திருவே கம்பத்தூர் கண்மாய் புறம்போக்கு நிலத்தை கணேசன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். அந்த ஆக்கிரமிப்புகளை செப்.30-ம் தேதி வருவாய்த்துறையினர் அகற்றினர்.

இதனால் ஆத்திரமடைந்த கணேசன், கிராம உதவியாளர் ராதாகிருஷ்ணனை வெட்டிக் கொலை செய்தார். இதை கண்டி த்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், ராதாகிருஷ்ணனின் மகளுக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்க மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார். ராதாகிருஷ்ணனின் உடல் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரது மகள் தாரணிக்கு பணி ஆணையை தேவகோட்டை வருவாய் கோட்டா ட்சியர் சங்கரநாராயணன், வட்டா ட்டசியர் மேசையதாஸ் ஆகியோர் வழங்கினர். கிராம உதவியாளர் இறந்த பின், ஒரே நாளில் அவரது வாரிசுக்கு பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனை அரசு ஊழியர்கள், இறந்த ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x