தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி ஆலைகள் இல்லை: அமைச்சர் கருப்பணன் தகவல்

கவுந்தப்பாடியை அடுத்த செந்தாம்பாளையத்தில் உள்ள காந்தி கோயிலில், நேற்று நடந்த அபிஷேக ஆராதனையில் அமைச்சர் கே.சி.கருப்பணன் உள்ளிட்டோர் பங்கேற்று, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கவுந்தப்பாடியை அடுத்த செந்தாம்பாளையத்தில் உள்ள காந்தி கோயிலில், நேற்று நடந்த அபிஷேக ஆராதனையில் அமைச்சர் கே.சி.கருப்பணன் உள்ளிட்டோர் பங்கேற்று, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Updated on
1 min read

ஈரோடு 

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் தமிழகத்தில் முழுமை யாக மூடப்பட்டுள்ளது என சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப் பாடியை அடுத்த செந்தாம்பாளை யத்தில் உள்ள மகாத்மா காந்தி கோயிலில் நேற்று நடந்த சிறப்பு வழிபாட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

செந்தாம்பாளையம் மகாத்மா காந்தி கோயிலை, அரசே ஏற்று நடத்த வேண்டுமென நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தால், முதல்வ ரிடம் தெரிவித்து அதற்கான நட வடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் 14 வகையான பிளாஸ் டிக் பொருட்களுக்கு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து தடை விதிக்கப் பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் அனைத்து ஆலைகளும் தமிழகத்தில் மூடப்பட்டு உள்ளன. இருப்பினும், தடைசெய்யப்பட்ட சில பிளாஸ்டிக் பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழ் ஆட்சி மொழி

இந்தியாவில் ஆட்சி மொழியாக தமிழைக் கொண்டு வர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு முன்பாக தேசிய அளவில் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகி யோர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை, முதல்வர் பழனிசாமியும் தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறார். இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in