அகழாய்வு பணிகளை காண கீழடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் வருகை
திருப்புவனம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வுப் பணி களை காண வரும் சுற்றுலாப் பயணி களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் வருகை தந்தனர்.
கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து 2, 3-வது கட்ட அகழாய் வையும் நடத்தியது. இதில் ஏராள மான தொல்பொருட்கள் கண்டெடுக் கப்பட்டன. இதைத் தொடர்ந்து தமிழக தொல்லியல்துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 13-ம் தேதி தொடங்கியது.
இதுவரை அணிகலன்கள், பானை ஓடுகள், இரும்பு பொருட்கள், செப்பு காசுகள், உணவு குவளை உட்பட 750-க்கும் மேற் பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. அதிக அளவில் சுவர்கள் கண்டறியப் பட்டுள்ளன. அகழாய்வுப் பணிகள் செப்.30-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டன.
இதனிடையே, கடந்த 2 வாரங் களுக்கு முன்பு கீழடி 4-ம் கட்ட அகழாய்வு முடிவுகள் வெளியிடப் பட்டன. இதில் கீழடி நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. இதனால் கீழடி அகழாய்வு மீதான ஆர்வம் மக்களிடம் அதிகரித்துள்ளது. இதையடுத்து தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் வசிப்போரும் அகழாய்வைக் காண கீழடிக்கு வருகின்றனர்.
நேற்று காந்தி ஜெயந்தியை யொட்டி விடுமுறை நாள் என்ப தால் ஒரே நாளில் 10 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் கீழடிக்கு வந்த னர். அகழாய்வு நடந்த பகுதியை காண்பதற்கு தினமும் காலை 10 முதல் மாலை 3 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
