

சென்னை
ரயிலில் பயணம் செய்ய ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் களுக்கு பயணத் தேதியை மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளதைப் போன்று, இ-டிக்கெட் முறையில், டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக் கும் தங்களது பயணத் தேதியை மாற்றிக் கொள்ளும் வசதியை அளிக்க வேண்டும் என பயணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், பயணம் செய்வதற்கு 4 மாதங்களுக்கு முன்கூட்டியே டிக்கெட்டை பதிவு செய்து கொள் ளும் வசதி தற்போது நடைமுறை யில் உள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையங்களிலும், ஐஆர்சிடிசி நிறு வனத்தின் இணையதளம் மூலமாக வும் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு முன்கூட்டியே டிக்கெட் எடுக்கும் பயணிகள் குறிப் பிட்ட நாளில் பயணம் செய்வதற்கு பதிலாக, முன்கூட்டியோ அல்லது முன்பதிவு செய்த தேதிக்குப் பிறகோ பயணம் செய்ய நேரிட்டால், அவர்கள் டிக்கெட்டை ரத்து செய்யாமலேயே தேதியை மட்டும் மாற்றிக் கொண்டு பயணம் செய்யலாம்.
ஆனால், இதில் உள்ள நிபந்தனை என்னவென்றால், ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் எடுக்கப்படும் உறுதி செய்யப்பட்ட, ஆர்ஏசி டிக்கெட்களுக்கு மட்டுமே இந்த தேதியை மாற்றும் வசதி உள்ளது.
அதேசமயம், இணையதளம் மூலம் எடுக்கப்படும் உறுதி செய் யப்பட்ட, ஆர்ஏசி இ-டிக்கெட்டில் இந்த மாற்றம் செய்ய அனுமதி கிடையாது. அவர்கள் அந்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு, மீண்டும் அவர்கள் விரும்பும் தேதியில் பயணம் செய்ய புதிதாக டிக்கெட் எடுக்க வேண்டும்.
தற்போது ரயில்வே விதிப்படி, உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால், டிக்கெட்டின் முழுக் கட்டணத்தில் இருந்து சுமார் 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.
ரயில் முன்பதிவு மையத்தில் எடுக்கப்படும் டிக்கெட்களின் பயணத் தேதியை மாற்ற விரும்பி னால், ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 தான் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. அதேசமயம், இ-டிக் கெட்டை எடுத்தால், அதில் பயண தேதியை மாற்றும் வசதி இல்லாத தால், டிக்கெட்டை ரத்து செய்து விட்டு புதிய டிக்கெட்டை எடுக்க வேண்டியுள்ளதால், பயணக் கட்ட ணத்தில் 50 சதவீதத் தொகையை இழக்கும் நிலை உள்ளது.
எனவே, ஆன்லைன் மூலம் இ-டிக்கெட் எடுக்கும் பயணி களுக்கு, டிக்கெட்டை ரத்து செய் யாமல் பயண தேதியை மாற்றும் வசதியை முன்பதிவு மையங்களில் ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் சங்கம் சார்பில் ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்துள்ள தெற்கு ரயில்வே துணைத் தலைமை வர்த்தக மேலாளர் அருண், இக் கோரிக்கையைப் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்ப தாக தெரிவித்துள்ளார்.