Published : 03 Oct 2019 08:37 AM
Last Updated : 03 Oct 2019 08:37 AM

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினம்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் மரியாதை

சென்னை

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினம் நேற்று நாடு முழு வதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காந்தியின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரை, காம ராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத் துக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலை மைச் செயலர் கே.சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதன்பின், சென்னை சர்வோ தயா சங்கத்தினர் நடத்திய நூற்பு வேள்வி மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சி யில் ஆளுநர், முதல்வர், அமைச் சர்கள் பங்கேற்றனர். முன்னதாக தீண்டாமை ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு, உலக அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி நடைபெற்ற சைக்கிள் பேரணியை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தொடங்கி வைத்தார்.

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் உருவப் படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்தியச் செயலாளர் வல்ல பிரசாத் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், காந்தியின் அரிய 100 புகைப் படங்கள் அடங்கிய கண்காட்சியும் திறக்கப்பட்டது. மேலும், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள், காமராஜர் நினைவு நாளையொட்டி அவர்களது உருவப் படத்துக்கும் காங்கிரஸ் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை தியாகராய நகர் தக்கர் பாபா வித்யாலயாவில் உள்ள மகாத்மா காந்தி திருவுருவச் சிலைக்கு பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், தென் சென்னை மாவட்ட பாஜக தலைவர் டால்பின் தரன், மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத் உள் ளிட்டோர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். பாஜக சார்பில் நடைபெறும் பாதயாத்திரையை இல.கணேசன் தொடங்கி வைத் தார்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் உருவப் படத்துக்கு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜய காந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு இந்திய கம்யூ னிஸ்ட் மாநில செயற்குழு உறுப் பினர் நா.பெரியசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேனாம்பேட்டை தமாகா அலுவலகத்தில், காந்தி மற்றும் காமராஜர் உருவப் படங்களுக்கு அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் மரியாதை செலுத் தப்பட்டது. மேலும், கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

கண்காட்சி

சென்னை தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா சார்பில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. தெற்கு ரயில்வே காரேஜ் வேகன் தொழிற்சாலையில் தலைமை தொழிற்சாலை மேலாளர் சண் முகானந்தம் புகைப்பட கண் காட்சியைத் தொடங்கி வைத்தார்.

மேலும், மத்திய அரசின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில், சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில், காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் 3 நாள் கண்காட்சியை, சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தின் செய்திப் பிரிவு இயக்குநர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் சிறப்பு தபால் தலையை தலைமை தபால் துறைத் தலைவர் எம்.சம்பத் வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x