

சென்னை
வாக்குறுதி அளித்தபடி கோரிக்கை களை அரசு நிறைவேற்றாததால் மீண்டும் வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட அரசு டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
அரசு டாக்டர்களுக்கு பதவி உயர்வு, ஊதியம் வழங்க வேண்டும். எம்சிஐ விதிப்படி டாக்டர்களின் எண்ணிக்கையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குறைக்கக்கூடாது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர் களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க அரசு டாக்டர்கள் ஒன் றாக இணைந்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் கூட்டமைப்பை தொடங்கி கடந்த மாதம் கால வரையற்ற உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட் டங்களில் ஈடுபட்டனர். இதை யடுத்து, சுகாதாரத் துறை அமைச் சர் சி.விஜயபாஸ்கர் தலைமை யில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில், 6 வாரத்தில் கோரிக்கை கள் பற்றி முடிவு எடுப்பதாக வும், கோரிக்கைகளை பரிசீலனை செய்ய ஐஏஎஸ் அதிகாரியான செந்தில்ராஜ் என்பவரை நியமிப்ப தாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று அரசு டாக்டர்கள் தங்களுடையை போராட்டங்களை வாபஸ் பெற்றனர். சுகாதாரத் துறை கேட்ட 6 வாரகால அவகாசத் தில் இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், நேற்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் செய லாளர் பீலா ராஜேஷை அரசு டாக்டர்கள் சந்தித்தனர்.
இதுதொடர்பாக அரசு டாக்டர் களிடம் கேட்ட போது, “ஐஏஎஸ் அதி காரியை பல முறை சந்தித்து கோரிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினோம். தற்போது அமைச் சர் மற்றும் செயலாளரை சந்தித்து பேசினோம். ஆனால், அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக எந்த உறுதியான முடிவும் தெரிவிக்கவில்லை. பேச்சு வார்த்தையின் போது, அவர் அளித்த உறுதியை நம்பிதான் போராட்டங்களை வாபஸ் பெற் றோம். எங்களுடைய கோரிக்கை களை நிறைவேற்றவில்லை என் றால் தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை” என்றனர்.