

சென்னை
விரைவு ரயில்களில் தூய்மை யின்மை மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டால் அவை குறித்து புகார் அளிக்கும் வகையில் ‘சபாய் ஆப்’ என்ற செயலியை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் நேற்று தொடங்கி வைத்தார்.
தெற்கு ரயில்வேயின் கீ்ழ் செயல்படும் சென்னை, சேலம், திருச்சி உட்பட 6 கோட்டங்களிலும் தூய்மை பணிகள், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் நேற்று ஆய்வு செய்தார். ரயில் நிலையங்களை தூய்மை யாக வைத்துக் கொள்வது குறித்து தன்னார்வத் தொண்டு அமைப் பினர் விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து ‘சபாய் ஆப்’ என்ற செல்போன் செயலியை தெற்கு ரயில்வே மேலாளர் ஜான் தாமஸ் தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம் ரயில் பயணிகள், தூய்மைக் குறைபாடு, சுகாதார சீர்கேடு குறித்து தங்களது புகார் களை தெரிவிக்கலாம்.
அதேபோல், சென்னை சென்ட் ரல் ரயில்வே பாதுகாப்பு படை யினரின் பயன்பாட்டுக்காக 6 செக்வே வகை வாகனங்கள் வழங்கப்பட்டன. மொத்தமுள்ள 12 நடைமேடைகளில் இருந்து அவசர கால சேவைக்கு இவை பயன்படுத்தப்படவுள்ளன.
‘சபாய் ஆப்’ குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இந்த செல்போன் செயலியை பயணிகள் பதிவிறக் கம் செய்து தங்களது விபரங் களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் ரயில் பயணத்தின்போது ஏற்படும் தூய்மை குறைபாடு மற்றும் சுகா தார சீர்கேடு குறித்து புகார்களை தெரிவிக்கலாம். புகார்களை பதிவு செய்து உடனுக்குடன் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.