Published : 03 Oct 2019 08:02 AM
Last Updated : 03 Oct 2019 08:02 AM

உயர் நீதிமன்ற தடையை மீறி கால்பந்து அசோசியேஷன் கூட்டத்தை கூட்டிய நிர்வாகிகளை 4 நாட்களுக்கு சிறைபிடிக்க உத்தரவு

சென்னை

உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடையை மீறி மாநில அளவில் தஞ்சாவூரில் வருடாந்திர கூட்டத்தைக் கூட்டி நிர்வாகிகளை தேர்வு செய்த தமிழ்நாடு கால்பந்து அசோசியேஷன் நிர்வாகிகளை 4 நாட்களுக்கு சிவில் கைதிகளாக சிறைப்பிடிக்க உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கால்பந்து அசோசியேஷன் மற்றும் அதன் கீழுள்ள 10-க்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட கிளப்புகள் சார்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘கிருஷ்ணகிரி மாவட்ட கால்பந்தாட்ட அசோசியேஷன் தமிழ்நாடு கால்பந்து அசோசி யேஷனின் கீழ் உள்ள ஆக்டிவ் சங்கமாக விளங்குகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட கால்பந்து அசோசியேஷன் நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்ததால், புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த வேண்டும் என முறைப் படி கோரிக்கை விடுத்தும் மாநில அசோசியேஷன் எந்த அறிவிப் பையும் வெளியிடவில்லை.

இதையடுத்து விதிமுறைகளின் படி நாங்களே ஒன்றுகூடி எங்களுக் குள் புதிய நிர்வாகிகளை கடந்த 28.12.2018 அன்று தேர்வு செய்து மாநில அசோசியேஷனுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அதை அங்கீகரிக்க மாநில நிர்வாகிகள் மறுத்துவி்ட்டனர். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட ஆக்டிவ் சங்கமான எங்களுக்கு அழைப்பு விடுக்காமல் கடந்த 9.2.19 அன்று தஞ்சாவூரில் தமிழ் நாடு கால்பந்து அசோசியேஷன் சார்பில் வருடாந்திர கூட்டத்தைக் கூட்டி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய மாநில நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இது சட்டவிரோதம் என்பதால் அந்த கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தனர்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், தஞ்சாவூரில் நடைபெறவிருந்த கூட்டத்துக்கு தடை விதித்து கடந்த 8.2.19 அன்று உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை மீறி தஞ்சாவூரில் கூட்டம் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட சங்கம் சார்பில் அந்த கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரியும், நீதிமன்ற தடையை மீறி கூட்டம் நடத்திய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த ஆக. 27-ம் தேதி நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பாக நடந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜாவும், தமிழ்நாடு கால்பந்து அசோசி யேஷன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசனும் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது மாநில அசோசியே ஷன் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட அசோசியேஷனுக்கு கடந்த 27.5.18 அன்று தேர்தல் நடத்தப்பட்டு 8 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டது. ஆனால் விசாரணையில் மாநில அசோசியேஷன் தெரி வித்தது போல அது மாதிரியான தேர்தல் கிருஷ்ணகிரியில் நடை பெறவில்லை என்றும், 8 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது போல உண்மைக்கு புறம்பான ஆவணங் கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப் பிடாமல் தள்ளி வைத்து இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதி ஆர்.சுப்பிர மணியன், ‘‘கடந்த பிப்ரவரி மாதம் உயர் நீதிமன்றம் விதித்த தடையை மீறி தஞ்சாவூரில் தமிழ் நாடு கால்பந்து அசோசியேஷன் சார்பில் நடத்தப்பட்ட கூட்டம் சட்டவிரோதமானது. அந்த நிர் வாகிகளின் பதவிக்காலம் ஏற்கெனவே காலாவதியாகிவிட்ட நிலையில் அவ்வாறு கூட்டம் நடத்த அவர்களுக்கு உரிமை இல்லை.

எனவே அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவு களும் ரத்து செய்யப்படுகிறது. இந்த கூட்டத்தை உயர் நீதிமன்றம் விதித்த தடையை மீறி வேண்டும் என்றே கூட்டம் நடத்திய நிர் வாகிகள் ஜேசய்யா வில்லவராயர், சிவானந்தன், ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், ராஜசேகரன், ரவிக்குமார், சுரேஷ் மனோகரன் ஆகியோரை 4 நாட்களுக்கு சிவில் கைதிகளாக சிறைபிடிக்க வேண்டும்.

அத்துடன் தமிழ்நாடு கால் பந்து அசோசியேஷனை நிர்வகிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜனை நிர்வாகியாக நியமிக்கிறேன். அவருக்கு மாதம் தோறும் ரூ. 75 ஆயிரம் ஊதியமாக வழங்க வேண்டும். அத்துடன் அவர் மாநில சங்கத்துக்கான தேர்தல் மற்றும் மாவட்ட சங்கங்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும்’ என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x