Published : 03 Oct 2019 07:58 AM
Last Updated : 03 Oct 2019 07:58 AM

‘நாளைய விஞ்ஞானி’மாணவர்களுக்கான அறிவியல் திருவிழா; சிறந்த ஆய்வுகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பரிசுகள்- ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க அக். 6-ம் தேதி கடைசி நாள்

சென்னை

‘நாளைய விஞ்ஞானி’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான அறிவியல் திருவிழா நடைபெறவுள்ளது.

சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப் பிக்கும் மாணவர்களுக்கு மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பரிசுகள் பகிர்ந்து வழங்கப்படும். அறிவியல் திருவிழாவில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அக்டோபர் 6-ம் தேதி மாலைக்குள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலாஜி (VIT) வழங்கும் ‘நாளைய விஞ்ஞானி’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான அறிவியல் திருவிழாவை ‘இந்து தமிழ்’ நாளிதழும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்துகின்றன. இதில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். 9, 10-ம் வகுப்பு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி, 11, 12-ம் வகுப்பு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என நான்கு தனித்தனி அமர்வுகளாக அறிவியல் திருவிழா நடைபெறும்.

மாணவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் நிலவும் ஏதேனும் ஒரு பிரச்சினையை அடை யாளம் கண்டு, அதற்கான காரணங்களை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய வேண்டும். அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி, அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். கூர்ந்து நோக்குதல், மக்களிடம் கருத்து கேட்டு, தகவல்களை திரட்டுதல், பரிசோதனைகளை நிகழ்த்திப் பார்த்தல் போன்ற பல அறிவியல் வழி முறைகளைப் பயன்படுத்தலாம்.

இவ்வாறு மக்களுக்கு பயன்படும் வகை யில் மாணவர்கள் கண்டறிந்த புதுமைகளை ஆய்வு கட்டுரையாக தயாரிக்க வேண்டும். ஆய்வின் தலைப்பு, ஆய்வுத் திட்டத்தின் நோக்கம், பிரச்சினைகளைக் கண்டறிய பயன்படுத்திய அறிவியல் வழிமுறை, பிரச்சினைகளின் பட்டியல், காரணங்கள், தீர்வுகள், தீர்வுகளை அமல்படுத்திய விதம் போன்ற விவரங்களைத் தொகுத்து இந்த ஆய்வுக் கட்டுரை தயாரிக்கப்பட வேண்டும்.

ஓர் ஆய்வுக் குழுவில் 3 முதல் 5 மாணவர்களும், அவர்களுக்கு வழிகாட்ட ஓர் ஆசிரியரும் இருக்கலாம். ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் அனைத்து மாணவர் களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

எப்போது சமர்ப்பிக்க வேண்டும்?

மாணவர்கள் தாங்கள் தொகுத்த ஆய்வுக் கட்டுரையின் ஒரு பிரதியை அருகில் உள்ள ‘இந்து தமிழ்’ அலுவலகம் அல்லது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரைகளை அக்டோபர் 6-ம் தேதி மாலைக்குள் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவர்களின் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் மதிப்பீடு செய்யப்பட்டு, சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர் களின் செல்பேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஆகவே, தொடர்பு முக வரியில் மாணவர்கள் தங்கள் செல்பேசி எண்ணையும் குறிப்பிடுவது அவசியம். சிறந்த கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்கள் மண்டல அறிவியல் திருவிழாவுக்கு அழைக் கப்படுவார்கள். அக்டோபர் 12, 13 ஆகிய இரண்டு தினங்களில் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சென்னை ஆகிய 4 இடங் களில் மண்டல அறிவியல் திருவிழாக்கள் நடைபெறும்.

மாணவர்கள் தாங்கள் மேற்கொண்ட அறி வியல் ஆய்வில், தங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து சுமார் 8 நிமிடங்கள் உரை நிகழ்த்த வேண்டும். அப்போது நடு வர்கள் மற்றும் பார்வையாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அவ்வாறு உரை நிகழ்த்தும்போது, தாங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பிரச்சினையில் மக்களுக்கு உதவும் வகையில், மாணவர்கள் தாங்கள் வடிவமைத்த கருவிகளை காட்சிப்படுத்தலாம்.

மண்டல அறிவியல் திருவிழாவில் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கும் மாண வர்கள் மாநில அறிவியல் திருவிழாவுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மாநில அளவி லான அறிவியல் திருவிழா அக்டோபர் 20-ம் தேதி வேலூரில் உள்ள வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலாஜி (VIT) வளாகத்தில் நடைபெறும். மாநில அறிவியல் திருவிழாவில் தேர்வு செய்யப்படும் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கு மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பரிசுகள் பகிர்ந்து வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 9488054683, 7401329435 ஆகிய செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x