தீப்பெட்டி தொழிலை நசுக்கும் 18 சதவீத ஜிஎஸ்டி: உற்பத்தியாளர்கள் கவலை; வரியை குறைக்க வலியுறுத்தல்

தீப்பெட்டி தொழிலை நசுக்கும் 18 சதவீத ஜிஎஸ்டி: உற்பத்தியாளர்கள் கவலை; வரியை குறைக்க வலியுறுத்தல்
Updated on
1 min read

கோவில்பட்டி

18 சதவீத ஜிஎஸ்டி வரியால் தீப்பெட்டி தொழில் நலிவடைந்து வருகிறது என, உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, விருது நகர், வேலூர் மாவட்டம் குடியாத்தம், தருமபுரி மாவட்டம் காவிரிபட்டணம் பகுதி களில் 300 பகுதி இயந்திரம் தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 50 முழு இயந்திர தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இருந்து தினமும் ரூ.5 கோடி முதல் ரூ.8 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி, சென்னை துறைமுகங்கள் வழியாக வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படு கின்றன. 18 சதவீத ஜிஎஸ்டி வரியால் தீப்பெட்டி தொழில் தற்போது நலிவடைந்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக் கின்றனர். சமீபத்தில் கோவாவில் நடந்த 37-வது கவுன்சில் கூட்டத்திலும் தீப்பெட்டிக் கான வரி குறைக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக கூறுகின்றனர்.

வரியை குறைக்க வேண்டும்

தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் ஆர்.எஸ்.சுரேஷ் கூறியதாவது: மூலப்பொருட்களுக்கு என்ன வரி விதிக்கப்படுகிறதோ, அதே வரி தான் தயாரிப்பு பொருட்களுக்கும் இருக்கும். ஆனால், தீப்பெட்டியின் மூலப்பொருட்களான குச்சி, அட்டை, பேப்பர் ஆகியவற்றுக்கு 12 சதவீதம் தான் ஜிஎஸ்டி உள்ளது. ஆனால், தீப்பெட்டிக்கு மட்டும் 18 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.

தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை கூடினால், தயாரிப்பு செலவும் உயரும். ஆனால் நாங்கள் தீப்பெட்டியை ரூ.1-க்கு தான் விற்பனை செய்கிறோம். விற்பனை விலையில் எங்களுக்கு 50 பைசா தான் கிடைக்கிறது. இதில் ஜிஎஸ்டியும் செலுத்துகிறோம். மேலும், இந்த 50 பைசாவில் தான் பொருளை தயாரித்து, தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட அனைத்தையும் சமாளிக்க வேண்டியதுள்ளது. ஜிஎஸ்டி வரியை குறைத்தால் மட்டுமே தீப்பெட்டி தொழிலை காக்க முடியும் என்றார் அவர்.

ஆர்டர்கள் வரவில்லை

நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தி யாளர்கள் சங்க செயலாளர் வி.எஸ்.சேது ரத்தினம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் இருந்தனர். தற்போது 2,500 பேர் தான் உள்ளனர். முழு இயந்திர தீப்பெட்டிக்கும், பகுதி இயந்திர தீப்பெட்டிக்கும் வேறுபாடு இல்லாமல் 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப் பட்டிருப்பது தான் இதற்கு காரணம். கால நிலையும் தீப்பெட்டி தொழிலை பாதித்து வரு கிறது. கடந்த சில மாதங்களாக வடமாநிலங் களில் தொடர்ந்த கனமழையால் தீப்பெட்டிக் கான ஆர்டர்கள் வரவில்லை. ஏற்கெனவே அனுப்பி வைத்த தீப்பெட்டி பண்டல்களுக்கு பணமும் வரவில்லை என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in