குற்ற வரலாறு பதிவேடு அடிப்படையில் காவல்துறை கண்காணிப்பில் 5,104 பேர்: மேற்கு மண்டல காவல்துறை தலைவர் தகவல் 

குற்ற வரலாறு பதிவேடு அடிப்படையில் காவல்துறை கண்காணிப்பில் 5,104 பேர்: மேற்கு மண்டல காவல்துறை தலைவர் தகவல் 
Updated on
2 min read

டி.ஜி.ரகுபதி

கோவை 

மேற்கு மண்டலத்தில், குற்றச் சம்ப வங்களை தடுக்க 5,104 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவ தாக காவல்துறை தலைவர் கே.பெரியய்யா தெரிவித்தார்.

கோவையை தலைமையிட மாகக் கொண்டு செயல்படும், மேற்கு மண்டல காவல்துறையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 8 மாவட்டங்கள், 200-க்கும் மேற்பட்ட காவல் நிலை யங்கள் உள்ளன. சட்டம் ஒழுங்கு பாதிப்பு மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை திருத்தும் வகை யில், அவர்களிடம் ‘சுய உறுதிமொழி பத்திரம்’ எழுதி பெறப்படுகிறது. காவல் நிலையங்கள் வாரியாக, ரவுடிகள், கிரிமினல்களின் குற்ற வரலாறு பதிவேடும் பராமரிக்கப்படு கிறது.

அதில், சம்பந்தப்பட்ட குற்ற வாளியின் பெயர், அவர் மீது எத் தனை வழக்குகள் உள்ளன என்பது குறித்து குறிப்பிடப்படுகிறது.

மேற்கு மண்டல காவல்துறை யிடம் உள்ள பட்டியலில், ரவுடிகள் பிரிவில் கோவையில் 300 பேர், ஈரோட்டில் 407 பேர், திருப்பூரில் 224 பேர், நீலகிரியில் 106 பேர், சேலத்தில் 385 பேர், நாமக்கல்லில் 381 பேர், தருமபுரியில் 449 பேர், கிருஷ்ணகிரியில் 379 பேர் உள்ளனர். கிரிமினல்கள் பிரிவில் கோவையில் 324 பேர், ஈரோட்டில் 287 பேர், திருப்பூரில் 266 பேர், நீல கிரியில் 156 பேர், சேலத்தில் 263 பேர், நாமக்கல்லில் 317 பேர், தருமபுரியில் 205 பேர், கிருஷ்ணகிரியில் 273 பேர் உள்ளனர்.

இது தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் கே.பெரியய்யா கூறும் போது, ‘‘இங்கு ரவுடிகள் பிரிவில் 2,631 பேரும், கிரிமினல்கள் பிரிவில் 2,091 பேரும் உள்ளனர். இவர்களில், தற் போது செயல்பாட்டில் (ஆக்டிவ்) உள்ளவர்கள், தீவிர செயல்பாட்டில் (ஆக்டிவ் பிளஸ்) உள்ளவர்கள் ‘ஏ’ பிரிவிலும், தொடர் குற்றத்தில் ஈடுபடாதவர்கள், தற்போது எந்த குற்றத்திலும் ஈடுபடாமல் உள்ளவர்கள் ‘பி’ பிரிவிலும், கடந்த 5 வருடங்களாக எந்த குற்றத்திலும் ஈடுபடாமல் திருந்தி வாழ்பவர்கள் ‘சி’ பிரிவிலும் பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ஏ’ பிரிவு நபர்கள் கைது செய்யப்படுகின்றனர். மற்ற பிரிவில் உள்ளவர்களிடம் ‘குறிப்பிட்ட காலத்துக்கு சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலும், குற்றச் சம்பவத்திலும் ஈடுபட மாட்டேன்’ என சுய உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கப்படுகிறது.

மொத்தம் 5,104 பேரிடம் சுய உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங் கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 1,417 பேரிடம் எழுதி வாங் கப்பட்டது. இதில் விதிகளை மீறிய 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள் ளனர். மேற்கண்ட 5,104 பேரும் காவல்துறையினரின் தொடர் கண் காணிப்பில் உள்ளனர். இதனால் குற்றச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு பாதிப்பு சம்பவங்கள் தடுக்கப்படுகிறது’’ என்றார்.

மாநகர காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது,‘‘கோவை மாநகரில் 350 ரவுடிகளிடம் உறுதி மொழிப் பத்திரம் எழுதி வாங்கப் பட்டுள்ளது. உறுதிமொழியை மீறிய 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

உறுதிமொழிப் பத்திரம் எதற்காக ?

காவல்துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘ ஒருவரிடம் 350 நாட்களுக்கு எந்த குற்றத்திலும் ஈடுபடக்கூடாது என பத்திரம் எழுதி வாங்கப்படுகிறது. அவர், முதல் 49 நாட்கள் சரியாக இருந்துவிட்டு, 50-வது நாளில் குற்றத்தில் ஈடுபட்டால் அந்நபர், நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்படுவார். வழக்கை விசாரிக்கும் நடுவர், மீதமுள்ள 300 நாட்களும் அந்நபரை சிறையில் அடைக்க உத்தரவிடுவார். இக்காலகட்டத்தில் அவர் பிணையிலும் வெளியே வர முடியாது. நடுவராக மாநகர காவல்துறையில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையரும், மாவட்ட காவல்துறையில் வருவாய் கோட்டாட்சியரும் செயல்படுவர்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in