வன உயிரின வார விழா இன்று தொடக்கம்: 10 ஆண்டில் இந்தியாவில் வன உயிரினங்கள் 20% குறைந்தன

அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள சிங்கவால் குரங்கு.
அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள சிங்கவால் குரங்கு.
Updated on
1 min read

எல்.மோகன்

நாகர்கோவில்

வன உயிரின வாரம் தொடங்கியுள்ள நிலையில், வனங்கள் ஆக்கிரமிப்பு, வறட்சியால் 10 ஆண்டுகளில் இந்தி யாவில் வன உயிரினங்களின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந் திருப்பது, சூழலியல் ஆர்வலர் களிடையே அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் அக்டோபர் 2 முதல் 8 வரை இந்திய வன உயிரின வாரம் கடைபிடிக் கப்படுகிறது. வனங்களில் வாழும் அனைத்து விலங்குகள் மற்றும் உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் 1952-ம் ஆண்டு முதல் இது அனுசரிக்கப்படுகிறது.

பூமி வெப்பமடைந்து பருவ நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம், காடுகளில் வறட்சி, உணவுகள் பற்றாக்குறை போன்றவற்றால் வன உயிரினங்கள் குறைந்து வருகின்றன. மேலும் ஒக்கி புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் மேற்கு தொடர்ச்சி மலையில் வன உயிரினங்களின் இருப்பிடங்கள் அதிக அளவில் அழிந்தன. இத்துடன் காடுகளை அழித்தல், வன ஆக்கிரமிப்பு, வனங்களை மனித செயல்பாட்டுக்கு பயன் படுத்துதல் போன்றவையும் காடுகளில் வாழ்ந்த பல்லுயிர்கள் அழிவுக்கு காரணம் என வன உயிரினங்களின் பண்புகளை கணக்கிட்டு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அழிந்துவரும் வனஉயிரினங் களை மீட்டெடுக்கும் வகையில் இந்தியாவில் வனங்கள் சூழ்ந்த பகுதிகளில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்தை நடைமுறைப் படுத்தும் முயற்சியை அரசு மேற் கொண்டு வருகிறது.

இதுகுறித்து நாகர்கோவிலை சேர்ந்த சூழலியல் ஆர்வலர் சற்குணம் கூறியதாவது:

சூழலியலாளர்கள், கல்வி யாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர் களை ஒருங்கிணைத்து விலங்கு கள் மற்றும் பல்லுயிர்கள் குறித்த கருத்துகளை அனைத்து மக்களிட மும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என இந்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆண்டு தோறும் மாநாடுகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றின் வாயிலாக அரசு இப்பணிகளை செய்கிறது. பள்ளி, கல்லூரிகளில் வனவிலங்குகள் குறித்த கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டி, விநாடி வினா மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அப்படி இருந்தும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 20 சதவீதம் அளவுக்கு வன உயி ரினங்கள் குறைந்திருப்பது வனத் துறை நடத்திய கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது. இந்த பாதிப்பு வன உயிரினங்களுக்கு மட்டுமின்றி நீர்நிலைகள், மண், ஆகாயம், கடல் சார்ந்து வாழும் உயிரினங்களுக் கும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக களக் காடு, வால்பாறை, கேரளாவின் பள் ளத்தாக்கு பகுதிகளில் பரவலாக காணப்பட்ட சிங்கவால் குரங்கு அழிந்துவரும் வன உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இது போல், காடுகளில் 30 ஆண்டுக ளுக்கு முன்புவரை காணப்பட்ட பறக்கும் அணில், பறக்கும் பல்லி போன்றவை இந்திய வனங்களில் தற்போது உள்ளனவா என்பதை உறுதிசெய்ய முடியவில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in