

காரைக்கால்
ஓஎன்ஜிசி செயல் இயக்குநர் மற் றும் காவிரிப்படுகை மேலாளராக காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதி யில் உள்ள ஓஎன்ஜிசி நிர்வாக அலு வலகத்தில் அனுராக் ஷர்மா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளாக காவிரிப் படுகை பகுதியில் ஓஎன்ஜிசி வெற்றி கரமாக செயல்பட்டு வருகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளில் மட்டுமே ஈடு பட்டு வருகிறது. ஷேல் காஸ், ஷேல் எண்ணெய், நிலக்கரிப் படுகை மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக் கும் செயல் திட்டம் ஓஎன்ஜிசி-யிடம் இல்லை.
டெல்டா மாவட்டப் பகுதிகளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி, கல்வி மேம்பாடு, தனிநபர் கழிப் பறை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஓஎன்ஜிசி செய்துள்ளது. கடந்த 10 ஆண்டு களில் ரூ.40 கோடிக்கும் மேலாக சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங் களுக்காக செலவிடப்பட்டுள்ளது. ரூ.3 ஆயிரம் கோடி தமிழக அரசுக்கு ராயல்டி மற்றும் வாட் செலுத்தப்பட்டுள்ளது.
ஓஎன்ஜிசி பாதுகாப்பான முறையிலேயே பணிகளை மேற் கொண்டு வருகிறது. சிலரால் பரப்படும் தவறான தகவல்கள், பிரச்சாரங்களை தமிழக மக்கள் நம்ப வேண்டாம்.
விவசாயிகளின் மேம்பாட்டுக் காக தஞ்சாவூர் சாஸ்த்ரா பல் கலைக்கழகத்துடன் இணைந்து இயற்கை விவசாயத்தை ஊக்கு வித்தல், வேளாண்மைக்கு தேவை யான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட செயல் பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப் பட்டு அதற்கான பணிகள் செய்யப் பட்டு வருகின்றன.
சூரிய மின்சக்தி பம்புகள், சூரிய மின் விளக்குகள் வழங்கு வது உள்ளிட்ட மக்களின் தேவைக் கேற்ற பல்வேறு உதவிகள் கிராம பகுதிகளில் செய்யப்பட்டு வருகின் றன. ஓஎன்ஜிசி வளர்ச்சிக்கான பணி தொடர்ந்து நடைபெறும் என்றார்.