

கோவை
இந்தியாவில் பெரிய நகரங்களில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப் படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந் தால் குணப்படுத்த முடியும் என்று கோவையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.குகன் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம், மார்பகப் புற்றுநோய் விழிப் புணர்வு மாதமாக அனுசரிக்கப் படுகிறது. இதன் ஒருபகுதியாக டிஜிட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை ஸ்ரீராமகிருஷ்ணா புற்று நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, மொபைல் போன் உறையில், விழிப்புணர்வு வாசகம் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது.
இதன் வெளியீட்டு விழா ஸ்ரீராம கிருஷ்ணா மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. மருத்துவ மனையின் தலைமை வணிக அதி காரி ஸ்வாதி ரோஹித், தலைமை செயல் அதிகாரி ராமகிருஷ்ணா விஜயகுமார், ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மைய இயக் குநர் டாக்டர் பி.குகன், கதிர்வீச்சி யல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக் டர் கே.கார்த்திகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாதிப்பு அதிகரிப்பு
நிகழ்ச்சிக்குப் பிறகு டாக்டர் பி.குகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் பெரிய நகரங்களில் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படும் பெண்க ளின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. சென்னையில் ஒரு லட்சம் பேரில் 40 பேரும், கோவையில் 28 பேரும், பெங்களூருவில் 29 பேரும், மும்பையில் 30 பேரும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின் றனர். குறிப்பாக, இளம் பெண்கள் அதிக அளவில் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் தாக்குதலுக்கு உள்ளான 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கை முறை மாற்றம், மேற்கத்திய உணவு முறை, தாமத மான திருமணம், தாமதமான கருத்தரிப்பு, மரபணு மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, நகரமய மாக்கல் அதிகரிப்பு, உடல் பரு மன், கொழுப்பு அதிகரிப்பு உள்ளிட் டவை மார்பகப் புற்றுநோய்க்கான காரணங்களாகும். இதற்கு ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகும்.
2.93 லட்சம் இலவச பரிசோதனை
`தீபம்' திட்டம் மூலம் இதுவரை 2.93 லட்சம் பேருக்கு இலவச மாக மார்பகப் புற்றுநோய் பரி சோதனை செய்யப்பட்டுள்ளது. புற்றுநோய் விழிப்புணர்வு வாசகம் இடம்பெற்றுள்ள செல்போன் கவர் களை இந்த மாதம் முழுவதும் இலவசமாக விநியோகிக்க உள் ளோம்.
விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட விரும்புவோர் 95007 22667 என்ற எண்ணில், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த மாதம் முழுவதும் ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையத் தில், இலவச மார்பகப் புற்று நோய் பரிசோதனை முகாம் நடை பெறுகிறது. இவ்வாறு டாக்டர் பி.குகன் தெரிவித்தார்.