நெசவாளர்களின் வாழ்வு சிறக்க கதராடைகளை அனைவரும் வாங்கி பயன்படுத்துங்கள்: பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

நெசவாளர்களின் வாழ்வு சிறக்க கதராடைகளை அனைவரும் வாங்கி பயன்படுத்துங்கள்: பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
Updated on
1 min read

சென்னை

நெசவாளர்கள், கைவினைஞர்களின் வாழ்வு சிறக்க கதர் ஆடைகள், கைவினைப் பொருட்களை அனை வரும் வாங்கிப் பயன்படுத்த வேண் டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

‘கதரின் பயன்பாடு சுதேசியின் அடித்தளமாகும்’ என்ற காந்தியடி களின் வரிகளை நினைவில் கொண்டு, அவரின் பிறந்த நாளான இன்று, கதராடைகளை நெசவு செய்யும் ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு மேன்மையுற மக்கள் அதிக அள வில் கதர் ஆடைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

கைராட்டைகளைக் கொண்டு நெசவு செய்யப்படும் கதர் ரகங்களைத் தயாரிப்பதில் நாட்டிலேயே தமிழ கம் முன்னோடி மாநிலமாகத் திகழ் கிறது. புதிய வடிவமைப்புகளில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினைஞர்களால் புதிய உத்தி களுடன் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களும் தமிழகத்தில் உள்ள கதர் அங்காடிகளில் விற்கப்படு கின்றன. அத்துடன் கதர் துணிகளின் விற்பனையை ஊக்குவிக்கும் வகை யில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் மூலம் ஆண்டு முழுவதும் அனைத்து கதர் ரகங்களும் 30 சதவீதம் தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

கதர் நெசவாளர்களின் மேம்பாட் டுக்காக கதர் நூற்போர் மற்றும் நெசவாளர்கள் நல வாரியத்தின் மூலம் கதர் வாரியம் மற்றும் சர் வோதய சங்கங்களில் பணியாற் றும் நூற்பாளர் மற்றும் நெசவாளர் களின் குடும்பத்துக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, விபத்து, இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை, முதியோர் ஓய்வூதி யம் போன்ற நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.

கிராமப்புற கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட் களையும், ஏழை, எளிய மக்களால் தயாரிக்கப்படும் கதர் ஆடைகளையும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் என பொதுமக்கள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்தி அவர்கள் வாழ்வு சிறக்க உதவ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in