புதுச்சேரி இடைத்தேர்தல்: காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் உட்பட 9 பேரின் மனுக்கள் ஏற்பு

ஜான்குமார்: கோப்புப்படம்
ஜான்குமார்: கோப்புப்படம்
Updated on
1 min read

புதுச்சேரி

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் உட்பட 11 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம் எம்.பி., கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலி இடமாக அறிவிக்கப்பட்டிருந்த காமராஜர் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

மொத்தமாக 18 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (அக்.1) நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா ஆகியோர் மனுக்கள் உட்பட 11 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

மாற்று வேட்பாளர், சுயேச்சை வேட்பாளர் உட்பட 7 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வரும் 3-ம் தேதி மனுக்களை திரும்பப் பெறலாம். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

செ.ஞானபிரகாஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in