

தமிழகத்தில் வெயில் குறைந்து பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயிலுக்கு இணையாக வெப்பம் வாட்டி வதைத்தது. சென்னை, கடலூர், திருச்சி ஆகிய இடங்களிலும் புதுச்சேரியிலும் வெயில் 40 டிகிரியை தாண்டியது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அள வுக்கு சென்னையில் அனல் காற்றோடு வெயில் கொளுத் தியது. வடமேற்கில் இருந்து வெப்பக் காற்று வீசுவதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை திடீரென மேகங்கள் திரண்டு இரவு வரை மழை கொட்டியது.
இந்நிலையில், வடமேற்கு திசையில் இருந்து வீசும் காற்றில் வெப்பம் தணிந்திருப்பதால் சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் தணியும்.