Published : 01 Oct 2019 09:04 AM
Last Updated : 01 Oct 2019 09:04 AM

தமிழர்களின் நாகரிகம் பழமையானது விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற தமிழர்கள்: சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்

சென்னை

தமிழர்களின் நாகரிகம் பழமையானது. தமிழர்கள் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள் என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.

நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக் கான தீர்வுகளை முன்வைக்கும் ‘சிங்கப் பூர் - இந்தியா ஹேக்கத்தான் 2019’ போட்டி சென்னை ஐஐடியில் நடந்தது. இந்திய ஐஐடிகள், சிங்கப்பூர் நான்யங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (என்டியு) ஆகியவற்றில் படிக்கும் 120 மாணவர்கள் தலா 6 பேர் வீதம் 20 குழுக்களாக இப்போட்டியில் பங்கேற் றனர். ஒவ்வொரு குழுவிலும் 3 இந்திய மாணவர்கள், 3 சிங்கப்பூர் மாணவர்கள் இடம்பெற்றனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற முதல் 3 குழுக்களுக்கு பரிசளிக்கும் விழா சென்னை தரமணியில் உள்ள சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் நேற்று காலை நடந்தது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பரிசுகளை வழங்கினார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், சிங்கப்பூர் கல்வி அமைச்சர் ஓங் யே குங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பரிசுகளை வழங்கி பிரதமர் மோடி பேசியதாவது:

தமிழர்கள் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள். தமிழர்களின் நாகரிகம் பழமையானது.

சவால்களை எதிர்கொள்ளவும், நடை முறைக்கு சாத்தியமான தீர்வுகளை கண் டறியவும் மாணவர்கள் காட்டிய ஆர்வ மும், அவர்களது திறமையும் போட்டியில் வெற்றி பெறுவதைவிட மகத்தானது.

இந்தியாவின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து செயல் பட்டு வருகிறது. இதற்கு ஹேக்கத்தான் போன்ற போட்டிகள் உதவியாக இருக்கும்.

சுற்றுச்சூழலை பாதிக்கா மல் புதிய தொழில்களை தொடங்கும் 3 முதன்மை நாடு களில் ஒன்றாக இந்தியா உள்ளது. 21-ம் நூற்றாண்டில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற ‘அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம்’, ‘பிரதமரின் ஆராய்ச்சி உதவி நிதி’, ‘தொடங்குக இந்தியா திட்டம்’ போன்றவை கொண்டு வரப்பட்டன. இதன்மூலம் நல்ல மாற்றங் கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் புதிய கண்டு பிடிப்புகளுக்கும், அதற்கான முயற்சி களை மேற்கொள்வதற்கும் இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளித்துள் ளது. புதிய கண்டுபிடிப்பு என் பதை ஒரு கலாச்சாரமாகவே இந்தியா மேம்படுத்தி வரு கிறது. இயந்திரங்கள் மூலம் கற்றல், 6-ம் வகுப்பு முதலே நவீன தொழில்நுட்பங்கள் பயிற்று வித்தல் என பல முயற்சிகளை மேற் கொண்டு வருகிறோம்.

முக்கியமான 2 காரணங்களுக்காக புதிய கண்டுபிடிப்புகளையும், அதற் கான முயற்சிகளையும் மத்திய அரசு ஊக்கப்படுத்துகிறது. புதிய கண்டு பிடிப்பு என்பது மக்களின் வாழ்க்கையை எளிதாக்கு வதாக, இந்தியாவின் பிரச் சினைகளுக்கு எளிய தீர்வாக அமைய வேண்டும். இரண்டாவதாக, ஒட்டு மொத்த உலகத்துக்குமான பிரச்சினை களுக்கும் இந்தியா தீர்வு காண வேண் டும் என்பதே நம் விருப்பம், குறிக் கோள். வறுமையில் உள்ள, பின்தங்கிய நாடுகளுக்கு குறைந்த செலவில் சேவை கள் கிடைக்கும் வகையிலான தீர்வு களை நாம் வழங்க வேண்டும். எந்த நாட் டினராக இருந்தாலும், சாதாரண மக்களின் வறுமையை ஒழிக்க புதிய கண்டுபிடிப்புகள் உதவ வேண்டும். ஏழைகளுக்கு ஆதரவாக கண்டுபிடிப்பாளர்கள் இருக்க வேண்டும். தமிழர்களின் நாக ரிகம் பழமையானது. தமிழர் கள் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள். சென் னைக்கு அருகே உள்ள மாமல்லபுரம் கல் சிற்பங்கள் பாரம்பரியம்மிக்கவை. இங்கு வந்துள்ள வெளிநாட்டு மாண வர்கள் கட்டாயம் மாமல்ல புரம் செல்ல வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

‘உற்சாகம் தரும் இட்லி, சாம்பார்’

விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘‘ஹேக்கத்தான் போட்டிக்காக 36 மணி நேரம் கடுமையாக உழைத்துள்ளீர்கள். ஆனாலும், அனைவரும் சோர்வின்றி உற்சாகம் புத்துணர்ச்சியுடன் இருப்பதை காண்கிறேன். தமிழர்களின் காலை உணவான இட்லி, வடை, சாம்பார்தான் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். ஹேக்கத்தான் போட்டியில் புதிய கேமரா ஒன்றை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பேச்சை யார் கவனிக்கிறார்கள், யார் கவனிக்கவில்லை என்பதை இதன்மூலம் கண்டறிய முடியும். இதை நாடாளுமன்றத்தில் பொருத்துமாறு மக்களவைத் தலைவரிடம் சொல்லப் போகிறேன்’’ என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x