Published : 01 Oct 2019 07:49 AM
Last Updated : 01 Oct 2019 07:49 AM

மத்திய அரசை கண்டித்து அக். 16-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: இடதுசாரி கட்சிகள் அறிவிப்பு

சென்னை

மத்திய பாஜக அரசைக் கண்டித்து அக்டோபர் 16-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) லிபரேசன் மாநிலச் செய லாளர் என்.கே.நடராஜன் ஆகி யோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய பாஜக அரசின் மோச மான பொருளாதாரக் கொள்கை களால் இந்தியா முன்னெப்போதும் கண்டிராத பொருளாதார நெருக் கடியில் சிக்கியுள்ளது. நாடு முழுவதும் தொழிற்சாலைகள் மூடல், தொழிலாளர்கள் வேலையிழப்பு அதிகரித்து வருகிறது. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவைகளால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து சந்தையில் பொருட்கள் தேக்கமும், ஆலை மூடல்களும் அதிகரித்து வருகின்றன.

மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தும் வகையில் வேலை வாய்ப்புகளையும், வருவாயையும் உயர்த்த நடவடிக்கைகள் எடுக் காமல், மீண்டும் மீண்டும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கே சலுகைகளை மத்திய அரசு வாரி வழங்கி வருகிறது. சமீபத்தில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கு பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகை அளித்துள்ளது.

மத்திய அரசின் இந்த மோசமான பொருளாதார கொள்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் இடது சாரி கட்சிகள் சார்பில் அக்டோபர் 10 முதல் 16-ம் தேதி வரை கண் டன இயக்கம் நடத்த வேண்டும் என்று டெல்லியில் நடந்த சிறப்பு மாநாட்டில் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

அதன்படி, ரிசர்வ் வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை பொது முதலீட்டுத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகரிக்க பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும், வேலையில்லா இளைஞர்களுக்கு நிவாரணம், குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயம், பொதுத்துறை நிறுவ னங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை தவிர்க்க வேண்டும்,

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் வேலை நாட்களை 200 ஆக அதிகரிக்க வேண்டும், விவசாயக் கடன் தள்ளுபடி, வயதானவர்கள், விதவைகளுக்கான ஓய்வூதி யத்தை ரூ.3 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் வரும் 13, 14 தேதிகளில் மாநிலம் முழுவதும் பிரச்சார இயக்கமும், 16-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப் பாட்டமும் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறி யுள்ளனர்.மத்திய பாஜக அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் இந்தியா முன்னெப்போதும் கண்டிராத பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. நாடு முழுவதும் தொழிற்சாலைகள் மூடல், தொழிலாளர்கள் வேலை யிழப்பு அதிகரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x