நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தொழில்நுட்ப ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அறிவுரை

சென்னை தரமணியில் உள்ள மத்திய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மரக்கன்று நடும் மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க். உடன் அந்த மையத்தின் தலைவர் வி.எஸ்.எஸ்.குமார், இயக்குநர் சுதீந்திரநாத் பான்டா. படம்: ச.கார்த்திகேயன்
சென்னை தரமணியில் உள்ள மத்திய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மரக்கன்று நடும் மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க். உடன் அந்த மையத்தின் தலைவர் வி.எஸ்.எஸ்.குமார், இயக்குநர் சுதீந்திரநாத் பான்டா. படம்: ச.கார்த்திகேயன்
Updated on
1 min read

சென்னை

நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொழில் நுட்ப ஆசிரியர்களுக்கு, மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அறிவுரை கூறியுள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள மத்திய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தில், மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அந்த வளாகத்தில் அமைக்கப்பட உள்ள திறந்தவெளி உடற்பயிற்சி மைய கட்டிடத்துக் கான அடிக்கல் நாட்டினார். வளாகத் தில் மரக்கன்றுகளையும் நட்டார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இம் மையம் சார்பில் தொழில் நுட்ப ஆசிரியர்களுக்கு, நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அவ்வப்போது அளிக்கப்பட்டு வரு கிறது. இங்கு சென்னை பல்கலைக் கழகத்துடன் இணைந்து பிஎச்டி பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இங்குள்ள ஆசிரியர்களின் வழி காட்டுதல்படி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான முதுநிலை பொறியியல், எம்பிஏ, பிஎச்டி படிப்புகள் தொடங்கப்பட்டு ள்ளன.

மேலை நாடுகளில், வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங் களுக்கு ஏற்ப, ஆசிரியர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்கின்ற னர். அவர்களை நாம் முந்திச் செல்ல வேண்டும் என்றால், நம் நாட்டு தொழில்நுட்ப ஆசிரியர்களும், நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்கள் அறிவை மேம்படுத் திக் கொள்ள வேண்டும். இந்த வளாகத்தில் இருந்து அதிக எண் ணிக்கையில் தொழில்நுட்ப வல்லு நர்களை உருவாக்க இந்நிறு வனத்தினர் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் வி.எஸ்.எஸ்.குமார், இயக்குநர் சுதீந்திரநாத் பான்டா உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in