

ப.முரளிதரன்
சென்னை
இன்று(அக்.1) முதல் அனைத்து கடன்களையும் ரெப்போ வட்டி வீதத்துடன் இணைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நிலையில், வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட் டியை வங்கிகள் குறைக்கவில்லை என்றால், வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என அதி காரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளு நராக சக்திகாந்த தாஸ் பதவி ஏற்ற பிறகு, ரெப்போ வட்டி வீதத்தை படிப்படியாகக் குறைத்து வருகி றார். இதுவரை 1.10 சதவீதத்துக்கும் மேல் ரெப்போ வட்டியைக் குறைத் துள்ளார்.
வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் கடன் தொகைக் கான வட்டி ரெப்போ எனப்படுகிறது. இந்த வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கும்போது, வங்கிகளுக்கு நிதி திரட்டும் செலவு குறையும். இதனால், குறைந்த வட்டியில் வாடிக்கையாளர்களுக்கு வங்கி களால் கடன் வழங்க இயலும்.
ஆனால், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை 1.10 சதவீதம் குறைத் துள்ள நிலையில், வங்கிகள் கடனுக் கான வட்டியை அரை சதவீதம் கூட குறைக்கவில்லை.
பொதுவாக, இந்த ரெப்போ வட் டியைக் குறைக்கும்போது, வங்கி கள், வாடிக்கையாளர்கள் வாங்கி யுள்ள வீட்டுக் கடன், தனிநபர் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன் களின் வட்டி வீதத்தைக் குறைப்ப தில்லை. அதேசமயம், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி வீதத்தை உயர்த்தினால், கடன்களுக்கான வட்டியை மட்டும், வங்கிகள் உடனே உயர்த்தி விடுகின்றன.
இதுதொடர்பாக வங்கி வாடிக் கையாளர்களிடம் இருந்து ஏராள மான புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு வந்தன. இதையடுத்து, ரெப்போ வட்டி வீதத்தைக் குறைக்கும் போது, அதன் பலனை வாடிக்கை யாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், இன்று(அக்.1) முதல் அனைத்து வங்கிகளும் அனைத் துப் புதிய கடன்களையும் ரெப்போ வட்டி வீதத்துடன் இணைத்து அமல்படுத்த வேண்டியது கட்டாயம் எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, தனிநபர் கடன், சிறு கடன்களுக்கான வட்டி, வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் சிறு, குறு தொழில்முனைவோர் கடன்களுக் கான வட்டி ஆகியவற்றை ரிசர்வ் வங்கியின் எக்ஸ்டெர்னல் பெஞ்ச் மார்க்குடன் இணைக்க வேண்டும். இதன் பிறகும் வங்கிகள் கடனுக் கான வட்டியைக் குறைக்கவில்லை என்றால், வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது:
வங்கிகள் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கும் வைப்புத் தொகையைத்தான், வாடிக்கை யாளர்களுக்கு வீட்டுக் கடன், வாகன கடன் உள்ளிட்ட கடன் திட்டங் களுக்கு வழங்குகின்றன. இவ்வாறு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டியைக் கொண்டுதான் வைப்புத் தொகைக்கு வட்டி வழங்கப்படு கிறது. எனவே, வைப்புத் தொகை வட்டிக்கும், கடன் திட்ட வட்டிக்கும் தொடர்பு உள்ளது.
இதனால், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியைக் குறைத்தாலும், வங்கி கள் தனது கடன்களுக்கான வட் டியைக் குறைப்பதில்லை. அவ் வாறு குறைத்தால் வைப்புத் தொகைக்கு ஏற்கெனவே ஒத்துக் கொண்டுள்ள வட்டியை வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால் வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்படும்.
இதனாலேயே பெரும்பாலான வங்கிகள் கடன்களுக்கான வட் டியை குறைப்பதில்லை. அவ்வாறு குறைத்தால், வைப்புத் தொகைக் கான வட்டியை வங்கிகள் குறைக் கும். மேலும், கடன்களில் நிரந்தர வட்டி (ஃபிக்சட்), மாறுபட்ட வட்டி (ஃப்ளோட்டிங்) என இரண்டு கடன் வழங்கும் முறைகள் உள்ளன.
இதில், நிரந்தர வட்டியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டி கூடினாலும், குறைந்தாலும் எவ்வித நன்மையும், தீமையும் ஏற்படப் போவதில்லை. அதே சமயம், மாறு பட்ட வட்டி வீதத்தில் கடன் பெற்ற வர்களுக்குத்தான் இந்த வட்டி வீத மாற்றம் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி கடன் திட்டங்களை ரெப்போ வட்டி வீதத்துடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என கூறியுள்ளதால் ரெப்போ வட்டி குறைந்தால் அதன் அடிப்படையில், வாடிக்கை யாளர்கள் தாங்கள் வாங்கியுள்ள கடனுக்கான வட்டியை குறைக்கு மாறு சம்பந்தப்பட்ட வங்கியிடம் கோரலாம். அதன் பிறகும் வங்கி கள் குறைக்கவில்லை என்றால், வங்கி குறைதீர்ப்பாளரிடம் (ஆம் புட்ஸ்மேன்) புகார் தெரிவித்து நிவாரணம் பெறலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.