Published : 30 Sep 2019 05:57 PM
Last Updated : 30 Sep 2019 05:57 PM

வடிவேலு மீம்ஸ் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு: ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் நூதன முயற்சி

ராமேசுவரம்

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடி மீம்ஸ்களை பயன்படுத்தி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் தினந்தோறும் வெளியாகும் மீம்ஸ், ட்ரோல் வீடியோக்களில் நகைச்சுவை வடிவேலுவின் ஏதேனும் ஒரு காமெடி வசனத்தை மேற்கோள்காட்டாமல் இருக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. இதனாலேயே மீம்ஸ் கிரியேட்டர்கள், சமூக வலைதளங்களில் வடிவேலுவை அரசராகவே கொண்டாடி மகிழ்கின்றனர்.

அந்தவகையில் நடப்பு நிகழ்வுகளை நகைச்சுவை நடிவர் வடிவேலு நடித்த காட்சிகளுடன் ஒப்பிட்டு மீம்ஸ்களாக மாற்றி சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்ட வைக்கிறது ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை பொது மக்கள் நலனிற்காக சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் பயன்படுத்தி வருகிறது.

இதன் அடுத்தகட்டமாக பேஸ்புக் சமூக வலைதளத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடி மீம்ஸ்களை கொண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் புது முயற்சியினை ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை தொடங்கி உள்ளனர்.

உதாரணத்திற்கு, ''மிடில் கிளாஸ் மாதவன் என்ற படத்தில் மாலை 6 மணிக்கு மேல் மது அருந்தி விட்டு தனது பெற்றோர்களிடம் சண்டை போடுவது போல் நகைச்சுகை காட்சி இடம் பெற்றிருக்கும். இந்த காட்சியினை மீம்ஸ் கிரியேட்டர்கள் பல விஷயங்களுக்கு பயன்படுத்தி உள்ளார்கள்.

அதேபோல் அந்த காட்சியை ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை , ''ராசா தண்ணியடிச்சிட்டு ஆட்டோ ஓட்டக் கூடாதுப்பா'' என்று மீம்ஸ் உருவாக்கியுள்ளார்கள். இந்த நகைச்சுவையான மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, "ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை பேஸ்புக் பக்கத்தை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்பற்றுகின்றனர். இதுவரை சுமார் 1,000த்திற்கும் மேற்பட்ட பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் பாதுகாப்பான பாஸ்வேர்ட் கொடுப்பதன் மூலம் ஹேக்கிங்கை தடுப்பது, தலைக்கவசம் அணிவதால் கிடைக்கும் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பது தொடர்பாகவும், குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் பதிவுகள் பகிரப்படுகின்றன.

இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததுடன் நாங்கள் வெயியிடும் பதிவுகளும் பலரால் பகிரப்படு கின்றன. இதனால் தற்போது வடிவேலு மீம்ஸ்களை ஆர்வமாக உருவாக்கத் தொடங்கி உள்ளோம்" என்றார்.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x