Published : 30 Sep 2019 10:02 AM
Last Updated : 30 Sep 2019 10:02 AM

திருச்சி எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையத்தில் இயல்பு நிலைக்கு திரும்பிய யானைகள்: ‘மலாச்சி’யுடன் சேர்ந்து நடைபயிற்சி, குளியல் என குதூகலம்

திருச்சி

விழுப்புரத்திலிருந்து லாரிகள் மூலம் எம்.ஆர்.பாளையம் மறு வாழ்வு மையத்துக்கு கொண்டு வரப்பட்ட இந்து, சந்தியா, ஜெயந்தி ஆகிய 3 யானைகளும் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. இவை, பயம் நீங்கி இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக வண்டலூர் வன உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவ அலுவலர் தயாசேகர் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையம் பகுதியில் காப்புக் காட்டில் ரூ.2 கோடி செலவில் 19.80 ஹெக்டேர் பரப்பளவில் யானைகள் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு முதன்முதலாக கடந்த செப்.7-ம் தேதி மதுரையிலிருந்து மலாச்சி என்ற யானை கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் குறும்பரம் பகுதியில் தனியார் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த காஞ்சி காமகோடி பீடத்துக்குச் சொந்தமான சந்தியா, இந்து, ஜெயந்தி ஆகிய 3 பெண் யானைகள் உயர்நீதி மன்ற உத்தரவுப்படி கடந்த 27-ம் தேதி இம்மையத்துக்குக் கொண்டு வரப்பட்டன.

இதற்கிடையே இந்த 3 யானைகளை திருச்சிக்கு கொண்டு வருவதற்காக குறும் பரம் கிராமத்தில் லாரியில் ஏற்றியபோது குச்சிகளால் அடித்து துன்புறுத்தியதாக வனத்துறை யினர் மீது குற்றச்சாட்டு எழுந் தது. இதையடுத்து கால்நடை பராமரிப்புத் துறையின் இணை இயக்குநர் எஸ்தர் ஷீலா தலைமையிலான குழுவினர் யானைகள் மறுவாழ்வு மையத்துக் குச் சென்று 3 யானைகளையும் பரிசோதித்து, சிகிச்சை அளித்தனர்.

அதேபோல, வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் தயாசேகர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்துக்கு வந்து 3 யானைகளையும் பரிசோதித்தனர். தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் இக்குழுவினர் அங்கேயே முகாமிட்டு யானைகளின் செயல் பாடுகளை கண்காணித்து வரு கின்றனர்.

இதுகுறித்து டாக்டர் தயா சேகரிடம் கேட்டபோது, ‘‘3 யானை களையும் அவை தங்கியிருந்த இடத்திலிருந்து வாகனங்களில் ஏற்றி திருச்சிக்கு கொண்டு வந்ததாலும், இங்கு புதுமையான சூழல் நிலவியதாலும் முதல்நாளில் அந்த யானைகள் சற்று பயத்துடன் இருந்துள்ளன. 2-வது நாளிலேயே அவற்றுக்கு பயம் நீங்கி, இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. தங்களுக்கு தேவையான அளவுக்கு உணவு, குடிநீர் எடுத்துக் கொள்கின்றன. மேலும் இங்கு ஏற்கெனவே இருந்த மலாச்சி யானையுடன் நெருங்கி பழகுவதுடன், அதனுடன் சேர்ந்தே நடைபயிற்சிக்கும் செல்கின்றன. ஷவரில் குளிப்பதுடன், உற்சாக மாக நடமாடுகின்றன. ஜெயந்தி யானைக்கு மட்டுமே சிறிய காயம் இருப்பதால், கூடுதல் கவனம் செலுத்தி கண்காணித்து வருகிறோம். ஓரிரு வாரங்களில் அதுவும் சரியாகிவிடும்’’ என்றார்.

இதுகுறித்து வனத்துறையினரி டம் கேட்டபோது, ‘‘வனத்துறையில் உள்ள பாகன்கள் மற்றும் அனு பவம் வாய்ந்த வனத்துறை ஊழியர்களைக் கொண்டு யானைகளை பராமரித்து வருகி றோம். அவற்றுக்கு கரும்பு, சோளத்தட்டை போன்றவற்றை வழங்கி வருகிறோம். யானைகளை கவனித்துக் கொள்வதற்காக வன சரகர் முருகேசன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப் பட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x