

கும்பகோணம்/தி.மலை
இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதில் பாஜக தலைமை இதுவரை எந்த முடிவை யும் எடுக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
கும்பகோணத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதா வது: ஐநா சபையில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் உள்ள அரங்கில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக் கூறி, தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார். இதற்காக தமிழக சட்டப்பேரவையைக் கூட்டி பிரதமருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதில் பாஜக தலைமை இதுவரை எந்த முடிவை யும் எடுக்கவில்லை.
பொருளாதார நெருக்கடி குறித்து பிரதமருக்கு தெரிய வில்லை என சுப்பிரமணியன் சுவாமி கருத்து கூறியிருந்தால், அதற்கு நான் பதில் சொல்ல விரும்ப வில்லை என்றார்.
இல.கணேசன் தகவல்
திருவண்ணாமலையில் செய்தி யாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன், “தமிழகம் மற்றும் புதுச் சேரி இடைத்தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோற்பதற்காக என்னவெல்லாம் முயற்சி செய்ய வேண்டுமோ, பாஜக செய்யும். அதில், சந்தேகம் இல்லை. இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதரிப்போம்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிக மான இடங்களில் போட்டியிடு வோம். அண்ணா பல்கலைக்கழகத் தில் பகவத் கீதையை விருப்ப பாட மாக அறிவித்த பிறகு, திமுக போராட்டம் நடத்தப்போவதாக கூறுவது அபத்தமானது” என்றார்.