Published : 30 Sep 2019 08:27 AM
Last Updated : 30 Sep 2019 08:27 AM

டிஎன்பிஎஸ்சி மாற்றி அமைத்துள்ள பாடத்திட்டம் தமிழ் எழுத, படிக்க தெரியாதவர்கள் அரசு பணியில் நுழைவதை தடுக்கும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து

சென்னை

டிஎன்பிஎஸ்சி மாற்றி அமைத்துள்ள புதிய பாடத்திட்டம், தமிழ் எழுத, படிக்க தெரியாதவர்கள் அரசு பணியில் நுழைவதை தடுக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-2 பணிகளுக்கான போட்டித்தேர்வின் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமி ழக அரசுத் துறைகளில் துணை வணிகவரி அதிகாரி, இரண்டாம் நிலை சார்-பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள் ளிட்ட 18 வகையான பணிகளுக்கு நேர்காணலுடன் கூடிய தொகுதி-2 போட்டித் தேர்வு மூலமாகவும், உதவியாளர், தனி எழுத்தர் உள்ளிட்ட 20 வகையான பணி களுக்கு நேர்காணல் இல்லாத தொகுதி-2ஏ போட்டித் தேர்வு மூலமாகவும் அதிகாரிகள் தேர்ந் தெடுக்கப்படுகின்றனர்.

இதுவரை இரு போட்டித் தேர்வு களும் தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இனி இவை ஒரே தேர்வாக நடத்தப்படும். இதனால் மாணவர்கள் தேவையின்றி கூடுதலாக ஒரு போட்டித்தேர்வை எழுதுவது தவிர்க்கப்படும்.

இப்போது மொழிப்பாடம் முழுமையாக நீக்கப்படவில்லை. மாறாக முதனிலைத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இரு அலகுகள் தமிழ் பாடம் சேர்க்கப்பட்டு, அப் பாடங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் வினாக்கள் கேட்கப்படவுள்ளன. இதன்மூலம் தமிழ் தெரியாதவர்களும், தமிழ் படிக்காதவர்களும் ஆங்கிலத்தின் துணையுடன் அதிக மதிப்பெண் பெற்று முன்னேறுவது தடுக்கப் படும்.

முதனிலைத் தேர்வில் பொதுத் தமிழ், பொது ஆங்கிலம் ஆகிய தாள்களில் இடம்பெறக்கூடிய பகுதிகள் முதன்மைத் தேர்வுகளில் கூடுதல் முக்கியத்துடன் சேர்க்கப் பட்டுள்ளன. தமிழ் தெரியாதவர்கள் அரசு பணிகளில் நுழைவதை இந்த முறை தடுக்கும்.

அண்மைக்காலமாக, தமிழக அரசுப் பணிகளில் தமிழ் மொழி தெரியாத பிற மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்வது அதிகரித்து வருகிறது. அதற்கு தமிழ் தெரியாதவர்கள்கூட போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது தான் காரணம். அந்த நிலையை மாற்ற தற்போது செய்யப்பட்டிருப்பது போன்ற பாடத்திட்ட மாற்றம் அவசி யம். அந்த வகையில் தேர்வா ணையத்தின் முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கையாகும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x