

சென்னை
கடும் உழைப்பால் உயர் பதவி யைப் பெற்றவர் தெலங்கானா ஆளு நர் தமிழிசை சவுந்தரராஜன் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் புகழாரம் சூட்டினர்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் செப்.8-ல் தெலங்கானா ஆளுநரா கப் பதவியேற்றார். அதன்பிறகு முதல் முறையாக சென்னை வந்த அவருக்கு சென்னை நலச் சங்கம் சார்பில் தியாகராய நகரில் பாராட்டு விழா நடைபெற்றது. அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொண்டு தமிழி சைக்கு பாராட்டு தெரிவித்தனர்.
விழாவில் பேசிய பிரேமலதா, ‘‘தமிழிசையும், நானும் பக்கத்து வீட்டுக்காரர்கள். அடிக்கடி சந்தித்துப் பேசக் கூடியவர்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக வளராத காலத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கட்சிக்காக உழைத்தவர். அதனைப் பார்த்து விட்டு நிச்சயம் ஒருநாள் தமிழிசைக்கு மிகப்பெரிய பதவி கிடைக்கும் என்று எனது கணவர் விஜயகாந்திடம் கூறுவேன். அது தான் தற்போது நடந்துள்ளது. தமிழிசையின் கடும் உழைப்புக் கும், அர்ப்பணிக்கும் கடவுள் கொடுத்த பரிசுதான் ஆளுநர் பதவி’’ என்றார்.
சரத்குமார் பேசும்போது, ‘‘தமிழிசை கடும் உழைப்பாளி. துணிச்சலானவர். எதற்கும் பயப் படாமல் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கக் கூடியவர். அதனால் தான் ஆளுநர் பதவி அவரை தேடி வந்துள்ளது. அவர் மேலும் சாதனை கள் படைப்பார்’’ என்றார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி, தமாகா மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், பாஜக முன்னாள் மாநிலத் தலை வர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட் டோர் கலந்து கொண்டு தமிழிசை யைப் பாராட்டிப் பேசினர்.
நிறைவாக ஏற்புரையாற்றிய தமிழிசை, ‘‘மேதகு தமிழிசை என் பதைவிட சகோதரி தமிழிசை என்று அழைப்பதைதான் நான் விரும்பு கிறேன். தெலங்கானா மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைப்பேன். என் மீது அன்பு கொண்டு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி’’ என்றார்.
நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தர ராஜனின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.