மன்னார் வளைகுடாவில் 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள்;  15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஆய்வில் கண்டுபிடிப்பு

மன்னார் வளைகுடா பகுதியில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள அகந்தாஸ்ட்ரியா (Acanthastrea), டெனாக்டிஸ் இச்சினேட்டா (ctenactis echinata), கேலக்ஸியா கிளாவஸ் (Galaxea clavus), டுபஸ்ட்ரியா கோக்கினியா (Tubastraea coccinea) என்ற பவளப்பாறை இனங்கள்.
மன்னார் வளைகுடா பகுதியில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள அகந்தாஸ்ட்ரியா (Acanthastrea), டெனாக்டிஸ் இச்சினேட்டா (ctenactis echinata), கேலக்ஸியா கிளாவஸ் (Galaxea clavus), டுபஸ்ட்ரியா கோக்கினியா (Tubastraea coccinea) என்ற பவளப்பாறை இனங்கள்.
Updated on: 
2 min read

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி

மன்னார் வளைகுடா பகுதியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடத் தப்பட்ட ஆய்வில் 62 புதிய கடல் வாழ் உயிரினங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.

நாட்டின் தென்கிழக்கு மூலை யில் ராமேசுவரம் முதல் கன்னியா குமரி வரை பரந்து விரிந்து காணப்படுகிறது மன்னார் வளை குடா கடல் பகுதி. கடல்சார் பல்லுயிர் பெருக்கத்துக்கு புகழ்பெற்ற மன் னார் வளைகுடாவில் பாம்பன் முதல் தூத்துக்குடி வரை 21 தீவுகள் உள்ளன. இந்த தீவுகளைச் சுற்றியுள்ள 560 சதுர கி.மீ. பரப் பளவு கொண்ட ஆழம் குறைந்த கடல் பகுதியை மன்னார் வளை குடா கடல்சார் தேசிய பூங்காவாக தமிழக அரசு கடந்த 1986-ம் ஆண்டு அறிவித்தது.

உயிர்கோள காப்பகம்

மேலும், ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரை மொத்தமுள்ள 10,500 சதுர கி.மீ. பரப்பையும் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்கோள காப்பகமாக மத்திய அரசு கடந்த 1989-ம் ஆண்டு அறி வித்தது. மன்னார் வளைகுடா பகுதி யில் மொத்தம் 4,223 கடல்வாழ் உயிரினங்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் மன்னார் வளை குடாவில் தற்போதைய கடல்வாழ் உயிரினங்கள் வளம் குறித்து ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் நட வடிக்கை எடுத்தன.

மத்திய அரசு நடவடிக்கை

அமைச்சகத்தின் பருவநிலை மாற்றத்துக்கான தகவமைப்பு நிதியின் கீழ், ஆய்வை நடத்த தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுமதி அளிக்கப் பட்டது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, நபார்டு வங்கி மேற்பார்வையில் கடந்த 2017 மே முதல் 2019 மார்ச் வரை மன் னார் வளைகுடாவில் ஆய்வு நடத் தப்பட்டது. சுமார் 15 ஆண்டு களுக்கு பிறகு நடைபெற்ற இந்த ஆய்வு குறித்து சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலைய இயக் குநர் ஜே.கே.பேட்டர்சன் எட்வர்டு கூறியதாவது:

மன்னார் வளைகுடாவில் இதற்கு முன் கடந்த 2003 - 2005-ல் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது தூத்துக்குடியில் இருந்து பாம்பன் வரையிலான மன்னார் வளைகுடா கடல்வாழ் தேசிய பூங்கா பகுதியில் பவளப்பாறைகளை பற்றி மட்டுமே ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரை 345 கி.மீ. தொலைவுக்கு 10 மண்டலங்களாக பிரித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆய்வின்போது மன்னார் வளை குடா பகுதியில் 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டு, அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

14 கடின பவளப்பாறை இனங் கள், 17 மெல்லிய பவளப்பாறை இனங்கள், 2 கடல்பாசி இனங்கள், 2 மீன் இனங்கள், 11 கடல் பஞ்சு இனங்கள், 16 சங்கு இனங்கள் புதிதாக கண்டறியப்பட்டுள்ளன. இவை தவிர 50-க்கும் மேற்பட்ட அடையாளம் காண முடியாத புதிய உயிரினங்களும் கண்டறியப் பட்டுள்ளன. இவற்றை அடை யாளம் காண சர்வதேச ஆராய்ச்சி யாளர்களின் உதவியுடன் முயன்று வருகிறோம்.

மேலும், 77 புதிய பவளப்பாறை திட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை 90 முதல் 730 சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ளன. இந்த திட்டுகள் 3 மீட்டர் முதல் 25 மீட்டர் ஆழத்தில் காணப்படுகின்றன. இவற்றின் மொத்த பரப்பு 20.60 சதுர கி.மீ. ஆகும். இந்த திட்டுகளில் பவளப்பாறை 10 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை காணப்படுகின்றன. இதேபோல் 39 புதிய கடல்புல் திட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

பாதுகாக்க வேண்டும்

கடந்த 2003 - 2005-ல் கிடைத்த ஆய்வு தகவல்களையும், தற் போது கிடைக்கப்பெற்றுள்ள ஆய்வு தகவல்களையும் ஒப்பிட்டு பார்க் கும்போது, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரியல் வளத் தில் பருவநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. மன்னார் வளைகுடா ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதார பகுதியாக இருப்பதால், இங்கு பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். குறிப்பாக மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் உறைவிடமான பவளப்பாறைகள் மற்றும் கடல் புற்களைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை என்றார்.

X