

சென்னை
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.1) முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
குமரிக்கடல் பகுதியில் தென் தமிழகத்தை ஒட்டி நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவி வருகி றது. அதன் காரணமாக இன்று தமிழகத்தின் தென் மாவட்டங் களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப் புள்ளது. இதர மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்வு காரணமாக நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிக பட்சமாக கன்னியாகுமரி மாவட் டம் சுரலக்கோடு, தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் ஆகிய இடங்களில் தலா 4 செமீ, சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால், அப்பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.