

சென்னை
அமமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூர் மாவட்ட செயலாளராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அமமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மேலும், அமைப்பு செயலாளர்களாக திருவான்மியூர் முருகன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.அருளும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பிரிவு துணை செயலாளராக திருப்பூர் விசாலாட்சியும், மாணவரணி செயலாளராக பரணீஸ்வரனும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.