Published : 29 Sep 2019 08:27 AM
Last Updated : 29 Sep 2019 08:27 AM

வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு 2% வரி வசூலித்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும்: பிரபல பொருளாதார நிபுணர் அனில் பொகில் கருத்து

ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் சென்னை கிளை (ஜிட்டோ) சார்பில் ‘வரியற்ற, ரொக்கமற்ற பொருளாதாரத்துக்கான வழிகள்’ என்ற கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் ஜிட்டோ அமைப்பின் தலைவர் தவுலத் ஜெயின், செயலாளர் நிமேஷ் டோலியா, உறுப்பினர் சுனில் எச்.ஷா, ஒருங்கிணைப்பாளர் பரத் ஜோஷி, முன்னாள் மண்டல தலைவர் எம்.கே.ஜெயின், அர்த்தகிரந்தி தொண்டு நிறுவனத்தின் தலைவர் அனில் பொகில், நிர்வாகி அனில் ஷிண்டே, உறுப்பினர் ரத்னவேலு, அர்த்தகிரந்தி தமிழ் மொழிபெயர்ப்பு நூலின் வெளியீட்டாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சென்னை

தற்போது வசூலிக்கப்பட்டு வரும் அனைத்து வரிகளையும் ரத்து செய்து விட்டு, அதற்குப் பதிலாக வங்கிப் பரிவர்த்தனை வரியாக 2 சதவீதம் வசூலிக்க வேண்டும். இதன்மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று பிரபல பொருளாதார நிபுணர் அனில் பொகில் கூறியுள்ளார்.

ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் சென்னை கிளை சார்பில், வரியற்ற, ரொக்கமற்ற பொருளாதாரத்துக்கான வழிகள் என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது. பிரபல பொருளாதார நிபுணரும், அர்த்தகிரந்தி என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் தலைவருமான அனில்போகில், இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய தாவது:

கறுப்புப் பணத்தையும், ஊழ லையும் ஒழிப்பதற்காக நாங்கள் கடந்த 17 ஆண்டுகளாக நடத்திய ஆய் வில், இந்தியாவில் தற்போது விதிக்கப் பட்டு வரும் வரி முறைகள் அனைத் தும் தவறாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வரி செலுத்தும் முறைகள் மக்களை வரி ஏய்ப்பு செய் யத் தூண்டுகிறது. இதன்மூலம், கறுப் புப் பணமும், ஊழலும் உருவாகிறது.

இதுபோன்ற வரி ஏய்ப்பு நட வடிக்கைகளை களைய தற்போது வசூலிக்கப்பட்டு வரும் அனைத்து வரி களையும் ரத்து செய்து விட்டு, அதற்குப் பதிலாக வங்கிப் பரிவர்த் தனை வரியாக 2 சதவீதம் வசூலிக்க வேண்டும். இதன் மூலம், அரசுக்கு தற்போது கிடைத்து வரும் வரி வருவாயை விட அதிக வருவாய் கிடைக்கும். ரூ.50-க்கு மேல் உள்ள அனைத்து ரூபாய்களையும் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் படிப்படியாக பண மதிப்பு இழக்கச் செய்ய வேண்டும். ரொக்கப் பணப் பரிவர்த்தனை ரூ.20 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். கறுப்புணத்தை வங்கியில் கொண்டு வந்து செலுத்துபவர்களுக்கு ஒரு முறை மன்னிப்பு வழங்கலாம். இவ்வாறு அனில் பொகில் கூறினார்

இக்கருத்தரங்கில், ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் சென்னை கிளையின் தலைவர் எம்.கே.ஜெயின், செயலாளர் நிமிஷ் டோலியா, உறுப்பினர் சுனில் எச்.ஷா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x