Published : 29 Sep 2019 08:24 AM
Last Updated : 29 Sep 2019 08:24 AM

சிறு, குறு தொழில்முனைவோரின் உற்பத்தியை சந்தைப்படுத்த ஆன்லைன் வர்த்தக இணையதளம் தொடங்க திட்டம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

சென்னை

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் உற்பத்தியை சந்தைப்படுத்த ஏதுவாக அலிபாபா, அமேசான் போன்று மத்திய அரசு சார்பில் ஆன்லைன் வர்த்தக இணை யதளம் தொடங்கப்படும் என மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் எம்எஸ்எம்இ துறை அமைச் சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

உமன்னொவேஷன் அமைப்பு மற்றும் மகா லேர்னிங் எஜூகேஷன் நிறுவனம் ஆகியவை சார்பில், மகளிர் தொழில்முனைவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில், கடும் சிரமங்களை சந்தித்து வெற்றிபெற்ற பெண் தொழில் முனைவோரின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் டபிள்யூடாக் (WTALK) நிகழ்ச்சி கிண்டியில் நேற்று நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பேசியதாவது:

இந்திய பொருளாதார வளர்ச்சி யில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட் டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 49 சதவீதம் எம்எஸ்எம்இ மூலமாக நடைபெறுகிறது. எம்எஸ்எம்இ மூலம் 11 கோடி பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். எம்எஸ் எம்இ மூலம் நடைபெறும் ஏற்று மதியை 60 சதவீதமாக உயர்த்த வும், மேலும் 5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சீனாவில் ஒரு பொருளை எடுத்துச் செல்வதற்கு ஆகும் செலவு, அந்த பொருளின் விற்பனை மதிப்பில் 12 சதவீதமாகவும், ஐரோப்பாவில் 14 சதவீதமாகவும் உள்ளது. ஆனால் இந்தியாவில் 18 சதவீதமாக உள்ளது. சாலை மூலம் சரக்குகளை கையாளும்போது ரூ.10 செலவாகிறது என்றால், நீர் வழித்தடங்களில் கொண்டு செல் லும்போது ரூ.1 தான் செலவாகிறது. அதற்காக பல்வேறு ஆறுகளை இணைக்கும் திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது எம்எஸ்எம்இ வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

சிறு, குறு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப் படுத்துவதில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றன. அவர்களின் உற் பத்தியை சந்தைப்படுத்த ஏதுவாக, அலிபாபா, அமேசான் போன்று, மத்திய அரசு சார்பில் வர்த்தக இணையதளம் தொடங்கப் பட உள்ளது. இதன் மூலம் எம்எஸ் எம்இ தொழில்முனைவோர் முன் னேற வாய்ப்பு ஏற்படும். இவர்கள் விற்பனை செய்த பொருட்களுக் கான பணம் காலத்தோடு கிடைக்க வேண்டும். அதில் சிக்கல் ஏற் பட்டால், தொழில்முனைவோர் புகார் அளிக்க ‘சமாதான்’ என்ற இணையதளத்தை தொடங்க இருக் கிறோம். அதில் தொழில்முனை வோர் புகார் தெரிவித்தால், அது குறித்து விசாரித்து, பொருளுக்கான பணத்தை பெற்றுதர வழிவகை செய்யப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய தொழில் நலிவு மற்றும் குறைதீர் குழு தலைவர் ரூபா சேகர்ராய், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜ், மகா லேர்னிங் எஜூகேஷன் நிறுவன மேலாண் இயக்குநர் கே.கிருஷ்ணவேணி, உமன்னொவேஷன் நிறுவனர் திரிப்தி எஸ்.சிங்கல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x