நாட்டுக்காகப் பணியாற்ற இளைஞர்கள் முன்வரவேண்டும்: ‘மறத்தல் தகுமோ’ நிகழ்ச்சியில் மேஜர் ஜெனரல் ஏ.அருண் வலியுறுத்தல்

கார்கில் போர் நினைவைப் போற்றும் வகையில் எஸ் பவுண்டேசன் அமைப்பின் சார்பில் ‘மறத்தல் தகுமோ' என்ற நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், எஸ் பவுண்டேசன் அமைப்பின் நிறுவன அறங்காவலரும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஆர்.சங்கரநாராயணன், இந்திய விமானப்படை விங் கமண்டர் அபிநந்தனின் தாயார் டாக்டர் ஷோபா வர்தமான், தந்தை ஏர் மார்ஷல் சிம்மக்குட்டி வர்தமான், ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் தலைமை பயிற்சி அதிகாரி மேஜர் ஜெனரல் ஏ.அருண், கார்கில் போரில் மரணமடைந்த விஜயந்த் தபாரின் தந்தை கர்ணல் வீரேந்திர நாத் தபார், தாயார் திரிப்தா தபார், எஸ் பவுண்டேசன் அமைப்பின் நிறுவன அறங்காவலர் ஜி.எஸ்.சிம்கன்ஜனா, எஸ் பவுண்டேசன் அமைப்பின் நிறுவன அறங்காவலரும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான கே.சுமதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Updated on
1 min read

சென்னை 

நாட்டுக்காகப் பணியாற்ற இளை ஞர்கள் முன்வரவேண்டும் என்று மேஜர் ஜெனரல் ஏ.அருண் வலி யுறுத்தியுள்ளார்.

கார்கில் போர் நினைவைப் போற்றும் வகையில் எஸ் பவுண் டேசன் அமைப்பின் சார்பில் ‘மறத் தல் தகுமோ' என்ற நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் நேற்று நடை பெற்றது.

நிகழ்ச்சியில், 'கார்கில் - 20 ஆண்டுகள் வெற்றிகளும் காயங் களும்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே சொல்திறன் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், ராணுவ அதி காரிகள் பயிற்சி மையத்தின் தலைமை பயிற்சியாளர் மேஜர் ஜெனரல் ஏ.அருண் சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று பேசியதாவது:

ராணுவ வீரர்கள் கடுமையான சூழல்களிலும் பல்வேறு சவால் களை எதிர்கொண்டு நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி யாற்றி வருகின்றனர். விளை யாட்டு வீரர், தீயணைப்பு துறை வீரர், தொழில்நுட்ப வல்லுநர் என அனைத் துத் தரப்பினரும் நாட்டுக்கு முக்கிய மானவர்கள்தான். இருப்பினும், பிற துறைகளில் பணியாற்றுபவர் களுக்கு வேலை மட்டும்தான் வழங்கப்படும். ஆனால், ராணுவத் துறையில் மட்டும்தான் வாழ்க்கை வழங்கப்படுகிறது.

உலகத்தில் சிறந்த பணி

உலகத்திலேயே சிறந்த பணி ராணுவத்தில் பணியாற்றுவது தான். அதனால்தான் இளைஞர்கள் தற்போது அதிக எண்ணிக்கையில் ராணுவத்தில் சேர்ந்து வருகின் றனர். பிறப்பு என்று நிகழ்ந்து விட் டால் இறப்பு என்பது நிச்சயம். ஆனாலும், இறப்புக்குப் பின்பும் நம்முடைய பெயர் நிலைத்து நிற்க வேண்டும். நம்முடைய செயல்கள்தான் நம்மை இறந்த பின்பும் வாழ வைக்கும். எனவே, இளைஞர்கள் நாட்டின் முன்னேற் றத்துக்காகப் பணியாற்ற வேண் டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் தாயார் ஷோபா வர்தமான் பேசும்போது, "அபிநந்தனுடைய வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்ட பின்பு பலர் என்னைத் தொடர்பு கொண்டு நாட்டுக்காக ராணுவத்தில் பணி யாற்ற வேண்டும் என்று கூறி னர். மகிழ்ச்சியாக இருந்தது. தங்களுடைய பிள்ளைகள் ராணு வத்தில் சேர விருப்பம் தெரிவித் தால் பெற்றோர் அவர்களைத் தடுக்காமல் ஊக்கப்படுத்த வேண் டும். நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ் வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றார்.

நிகழ்ச்சியில், சங்கீத நாடக அகாடமியின் துணைத்தலைவர் அருணா சாய்ராம், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் துணை இயக்குநர் என்.பிரியா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in