

குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மறைவையொட்டி ஒரு வார காலத்துக்கு அதிமுக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக உலகம் புகழும் வகையில் பணியாற்றிய ‘பாரத ரத்னா’ டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மரணமடைந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறேன்.
டாக்டர் கலாமின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அஇஅதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்துக்குள் ஒத்தி வைக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.