Published : 28 Sep 2019 07:37 AM
Last Updated : 28 Sep 2019 07:37 AM

புதிய மோட்டார் வாகன சட்டம்: அபராத கட்டணத்தை குறைக்க தமிழக அரசு முடிவு

சென்னை

புதிய மோட்டார் வாகன சட்டத் தில் உள்ள அபராத கட்டணங் களை, சில பிரிவுகளில் குறைத்து அடுத்த 2 வாரங்களில் தமிழக போக்குவரத்து துறை அறிவிக்க வுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளால் சராசரியாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். எனவே, சாலை விபத்துகளை குறைப் பதோடு, ஓட்டுநர் உரிமம் வழங்கு வதை முறைப்படுத்துதல் உட்பட பல்வேறு அம்சங்களுடன் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட் டத்தை சமீபத்தில் அமல்படுத் தியது.

இச்சட்டத்தின்படி, குடி போதையில் வாகனம் ஓட்டுபவர் களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், 2-வது முறை என்றால் ரூ.15 ஆயிரம் அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை, ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 அப ராதம், 2-வது முறையும் இதே தவறைச் செய்தால் 3 மாதங் களுக்கு ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் உட்பட பல்வேறு விதி மீறல்களுக்கு அபராத தொகை 5 மடங்கு வரையில் அதிகரிக்கப் பட்டுள்ளது. இதுபோல் அபராதத் தொகையை அதிகமாக வசூலிப் பதற்கு மக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதையடுத்து, போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதங்களை விதிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக் கலாம் என மத்திய அரசு அறி வித்தது. குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் அபராத தொகை கணிசமாக குறைக்கப்பட்டுள் ளது. தமிழகத்திலும் அபராத கட்டணங்களை குறைக்கும் வகையில் தமிழக போக்குவரத்து துறை ஆய்வு மேற்கொண்டது. அதில், பல்வேறு பிரிவுகளில் கட் டணத்தை குறைத்து, தமிழக அரசின் ஒப்புதலுக்காக போக்கு வரத்து துறை அனுப்பியுள்ளது. எனவே, அடுத்த 2 வாரங்களில் அபராத கட்டண குறைப்பு தொடர் பாக தமிழக அரசு அறிவிக்கும் என போக்குவரத்து துறை அதி காரிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x