

உடுமலை ஐஸ்வர்யா நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (45), தேமுதிக மாவட்ட துணைத் தலைவரான இவர் மீது உடுமலை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர், ஏற்கெனவே குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் இருந்து, சமீபத்தில்தான் வெளியே வந்துள்ளார்.
வழக்கு விசாரணைக்காக உடுமலை ஜே.எம்.1 நீதிமன்றத் தில் நேற்று ஆஜராகிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில், சம்பவ இடத் திலேயே இறந்தார். மேலும் வீட்டில் இருந்த இருவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இக்கொலை தொடர்பாக முத்து என்பவர் மீது உடுமலை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.