Published : 27 Sep 2019 02:36 PM
Last Updated : 27 Sep 2019 02:36 PM

மின்துறையில் உள்ள 5 ஆயிரம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் தங்கமணி

உதகை
தமிழக மின்துறையில் உள்ள 5 ஆயிரம் காலி பணி இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட அவலாஞ்சி மின் நிலைய ஊழியர்களின் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அதில் ஏற்பட்ட சேதங்களை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று ஆய்வு செய்தார்.

கடந்த மாதம் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் பெய்த வரலாறு காணாத மழையால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் அவலாஞ்சி பகுதியில் பணிபுரிந்து வரும் 100-க்கும் மேற்பட்ட மின் வாரிய ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கித் தவித்தனர். காட்டு குப்பை மின்நிலையத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி இன்று அவலாஞ்சி மின் நிலையத்தை ஆய்வு செய்தார்.

மேலும் மின்வாரிய ஊழியர்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார். அதனை தொடர்ந்து தமிழக மின்துறையில் உள்ள 5 ஆயிரம் காலி பணி இடங்கள் விரைவில் நிரப்பபடும் என்றார்.

கன மழையால் பாதிக்கப்பட்ட அவலாஞ்சி மின் வாரிய ஊழியர்களுக்கு குடியிருப்புகள், ஆம்புலன்ஸ் வசதிகள் உள்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்ற அவர், நீலகிரி மாவட்டம் சில்அல்லா பகுதியில் 2 ஆயிரம் மெகா வாட்டில் புதிய நீர் மின் நிலையம் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்கு, வனத்துறை அனுமதி இன்னும் கிடைக்காமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x