

திருச்சி
முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம் களில் வரப் பெற்ற கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் தமிழ கத்தில் 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வும், 5 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கவும் சிறப்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ள தாக வருவாய், தகவல் தொழில் நுட்பம், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப பூங்கா முன்னேற்ற ஆக்க கருத்தரங்கில் கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். குறிப்பாக, உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட ரூ.11,974 கோடி மதிப்பிலான முதலீடுக ளுக்கு முழுமையான செயல்வடி வம் கொடுக்க பல்வேறு அறிவுரை களை வழங்கி அதற்கான நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளார்.
திருச்சி, மதுரை, சென்னை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள் உடனடியாக தொழிலை தொடங்க வேண்டு கோள் விடுக்கவும், தொழில் தொடங்க தயாராக உள்ளவர் களுக்கு தேவையான இடங்களை ஒதுக்கவும் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
அதன் அடிப்படையில், இந்திய தொழில் குழுமத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசின் தகவல் தொழில் நுட்பத் துறை இந்த கருத்தரங்கை நடத்தியுள்ளது. இதில், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் தொழில் நிறுவனங்க ளுக்கு வழங்கப்படும் வசதிகள் உட்பட அனைத்து உதவிகள் குறித்தும் விளக்கப்படுகிறது.
அண்மையில் ஆளுநர் மாளிகை யில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரை முதல்வர் பழனிசாமி சந்தித்தபோது, திருச்சி விமான நிலைய விரிவாக்கம் மற்றும் ஜங்ஷன் மேம்பாலப் பணிக்குத் தேவைப்படும் ராணுவ இடத்தைத் தருமாறு கோரிக்கை விடுத்தார்.
நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் நோக்கில் 1.10 லட்சம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் உள்ளாட்சித் துறை யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல, முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம்களில் வரப் பெற்ற கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் 5 லட்சம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க வும், 5 லட்சம் பேருக்கு முதி யோர் ஓய்வூதியம் வழங்கவும் சிறப்பு அரசாணைகள் வெளியிடப் பட்டுள்ளன.
சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்த இல்லந் தோறும் இணையம் திட்டம் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல் படுத்தப்பட உள்ளது. முதல் கட்ட மாக தமிழ்நாட்டில் உள்ள 12,545 ஊராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதற்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.1,800 கோடிக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது என்றார்.