

கோவை
2 மாணவர்களின் நீட் தேர்வு அனு மதிச் சீட்டில் உள்ள புகைப்படத்தில் வேறுபாடு இருப்பதாக எழுந்த சந்தேகம் குறித்து கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் எஸ்.ராமலிங்கம் விளக் கம் அளித்துள்ளார்.
சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா. இவர் தேனி அரசு மருத் துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வு மற்றும் கலந்தாய்வில் ஆள்மாறாட் டம் செய்திருப்பது மருத்துவக் கல்வி அதிகாரிகள் நடத்திய விசார ணையில் தெரியவந்தது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவ காரம் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல் லூரிகளிலும், முதலாமாண்டு மாண வர்களின் புகைப்படம், சான்றிதழ் களை சரிபார்க்க மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக நடத்தப் பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாண வர் மற்றும் மாணவி மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு கல்லூரி நிர்வாகம் அறிக்கை அனுப்பியுள் ளது. இதுதொடர்பாக பிஎஸ்ஜி மருத் துவக் கல்லூரி டீன் டாக்டர் எஸ்.ராம லிங்கம் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:
2 நாட்களுக்கு முன்னர்தான் அரசு சார்பில் மருத்துவ மாணவர் களின் ஆவணங்களை சரிபார்க்க அறிவுறுத்தியிருந்தனர். இதை யடுத்து கல்லூரியில் சேர்ந்த 150 மாணவர்களின் ஆவணங்களை சரி பார்த்ததில், அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த 2 மாணவர்களின் நீட் தேர்வு நுழைவுச்சீட்டில் இருந்த புகைப்படத்துக்கும், கல்லூரியில் சேர்ந்தவர்களின் உருவத்துக்கும் வேறுபாடு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. ஆனால், கல்லூரி ஒதுக் கீட்டு ஆணையில் உள்ள புகைப் படத்துடன், அந்த 2 மாணவர்களின் உருவமும் ஒத்துப்போகிறது.
இந்த சந்தேகம் தொடர்பாக இரண்டும் மாணவர்களின் பெற் றோரிடம் விசாரித்தோம். அவர் கள், தவறு ஏதும் நடைபெறவில்லை என்று தெரிவித்தனர். புகைப்படம் பொருந்தவில்லை என்பதை இப் போதே உறுதியாக கூற முடியாது.
இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநரகம் மற்றும் தமிழ் நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். இது தொடர் பாக விசாரணை செய்து தேர்வுக் குழுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. விசாரணைக்காக மாணவர்கள் இருவரும் சென்னை சென்றுள்ளனர் என்றார்.
கோவை பிஎஸ்ஜி கல்லூரி யில் புகைப்படங்கள் வேறுபட் டுள்ளதாக கண்டறியபட்ட 2 மாண வர்களும் மருத்துவ கல்வி இயக்கு நரகம் நடத்தும் விசாரணையில் விளக்கம் அளித்துவிட்டு தடை யில்லா சான்று பெற்றுவர கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து புகார் கூறப்பட்ட 2 பேரும் அவர்களின் பெற்றோரும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநரகத் துக்கு நேற்று காலை வந்தனர். ஆனால், மருத்துவக்கல்வி இயக்கு நரும், தேர்வுக்குழு செயலாளரும் அரசு பணி காரணமாக டெல்லி சென்றுவிட்டதால் நேற்று அவர் களிடம் விரிவான விசாரணை நடத் தப்படவில்லை. சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்கள் மட்டும் சரி பார்க்கப்பட்டன. அதன்பின் இன்று (செப்.27) காலை மீண்டும் வரும்படி தகவல் தெரிவிக்கப்பட்டது.
புகைப்படம் வேறுபட்டதற்கான காரணம் குறித்து சம்பந்தபட்ட மாணவர்களின் பெற்றோர் கூறும்போது, ‘‘பள்ளியில் படித்த போது எடுத்த புகைப்படத்தை நீட் தேர்வு ஹால்டிக்கெட்டில் கொடுத் ததால் புகைப்படம் வேறுபட்டு உள்ளது. இதுகுறித்து உரிய விளக் கத்தை கல்லூரி நிர்வாகத்திடமும் தெரிவித்துவிட்டோம். மருத்துவக் கல்வி இயக்குனரிடம் நேரில் விளக் கம் அளிக்க வந்தோம்’’ என்றனர்.