அதிகாரிகள் மட்டத்தில் மீண்டும் பேச்சு நடத்துவது பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தத்தை தாமதப்படுத்தும்: திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து

அதிகாரிகள் மட்டத்தில் மீண்டும் பேச்சு நடத்துவது பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தத்தை தாமதப்படுத்தும்: திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து
Updated on
1 min read

சென்னை

அதிகாரிகள் மட்டத்தில் மீண்டும் பேச்சு நடத்துவது பரம்பிக்குளம் - ஆழியாறு மறுஆய்வு ஒப்பந்தத்தை தாமதப்படுத்தும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஆனைமலையாறு, நீராறு, சோலை யாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு, ஆழியாறு, பாலாறு ஆகிய நதிகளின் நீரைப் பயன்படுத்தும் வகையில் 2-வது ஐந்தாண்டு திட்டத்தில் (1955-1960) கேரள அரசின் ஒப்புதலுடன் தமிழக அரசால் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் உருவாக்கப்பட்டது. திமுக ஆட்சியில் கருணாநிதி முதல் வராக இருந்தபோது 1970 மே 29-ல் தமிழகம் - கேரளா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது 30 ஆண்டுகளுக்குப் பிறகு 1988-ல் மறுஆய்வு செய்யப்பட வேண் டிய நிலையில்,1989 செப்டம்பர் 21-ல் அன்றைய முதல்வர் கருணாநிதி முயற்சியால் ஒப்பந்த மறுஆய்வுக் கான ஆவணங்கள் இரு மாநிலங்களுக் கிடையே பரிமாற்றம் செய்து கொள்ளப் பட்டன. அதையடுத்து அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த 2006-2011 திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பல சுற்று பேச்சுவார்த் தைக்கு பிறகு 2011 ஜனவரி 21-ல் நடந்த இரு மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில், ஆனைமலை ஆற்றிலிருந்து 2.5 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திருப் பும் திட்டம், மணக்கடவின் மேற்பகுதி யில் 0.50 டிஎம்சி சமச்சீர் நீர்தேக்க திட்டம், நீராறு -நல்லாறு பல்நோக்கு நேர் இணைப்புத் திட்டம் போன்றவை விவாதிக்கப்பட்டன.

திமுக ஆட்சியில் பல சுற்றுகள் பேச்சு நடந்த நிலையில் கடந்த 8 ஆண்டு களாக இந்தப் பணிகளை விரைவு படுத்த அதிமுக அரசு எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. தமிழக கேரள முதல்வர்கள் சந்திப்பு வரவேற் கத்தக்கது. ஆனால், மீண்டும் 10 பேர் கொண்ட குழு என்பது காலதாமதம் ஏற்படுமோ என்ற அச்சத்தை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 31 ஆண்டுகளை நெருங்கி விட்ட பரம்பிக்குளம் - ஆழியாறு மறு ஆய்வு ஒப்பந்தம் மேலும் காலதாமதமாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இதனை குறுகிய கால வரை யறைக்குள் முதல்வர் பழனிசாமி நிறைவேற்ற வேண்டும். கேரள அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும். நிலுவையில் உள்ள நீர்பாசனத் திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in