

சென்னை
திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட்களை விற்பனை செய்வது தொடர்பாக செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நேற்று திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர் கள், விநியோகஸ்தர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, வீட்டு வசதித் துறை செயலர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செய லர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதி காரிகள், திரையரங்கு உரிமை யாளர்கள் சங்கம் சார்பில் அபிராமி ராமநாதன், இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ்த் திரைப்பட பாதுகாப்பு பேரவை தலைவர் ராஜன், எஸ்.வி.சேகர், திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில் நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட் வசதி இருக்க வேண்டும் என்பதே இன் றைய கூட்டத்தின் நோக்கம். திரை யரங்குகளின் அனைத்து டிக்கெட் களையும் ஒரே சர்வர் வழியாக கண் காணிக்க வழிவகை ஏற்படும். இதன் மூலம் சினிமா துறையில் வெளிப் படைத்தன்மை இருக்கும். ஆன் லைனில்தான் திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை செய்ய வேண் டும் என்று மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது.
ஆன்லைன் விற்பனையை திரைத்துறையினர் எல்லோரும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், பல திரையரங்குகளில் கணினி வசதி கள் இல்லை என்பது குறித்தும், ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
இதுபோன்ற நடைமுறை யால், சினிமாத்துறையில் புழங் கும் பணம் கணக்கில் வந்துவிடும். கட்டணம் எவ்வளவு, அதற்கான வரி என்ன? என்பது வெளிப்படை யாக தெரியும். திரையரங்கு உரிமை யாளர்களும் ஒரு அரங்கை, நான் காக பிரித்து மாற்றி அமைக்கவும் அரசு அனுமதியளிக்கும் பட்சத் தில், ஒரே வளாகத்தில் பல திரைப் படங்கள் வெளியாகும். இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறும் போது “இத்திட்டம் நாளையே முடிக் கக் கூடியதல்ல. சரியாக திட்ட மிட்டு அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் அறிந்து செயல் படுத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.
தமிழ்த் திரைப்பட பாதுகாப்புப் பேரவைத் தலைவர் கே.ராஜன் கூறும்போது, “தீபாவளிக்கு முன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. தமிழகத்தில் 300 திரையரங்குகளில் கணினி வசதி இல்லை” என்றார்.